கம்பராமாயணம் 10002 · யுத்த 36.241

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரைகடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் பேர் அறிஞர்க்கேயும்
உரைகடை இட்டு அளப்பு அரிய பேர் ஆற்றல் தோளாற்றற்கு உலப்போ இல்லை
திரைகடை இட்டு அளப்ப அரிய வரமென்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிறகடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப்பயனின் பெருமை பார்ப்பேன்?

பொருள் · Meaning in Tamil

அரை கடையிட்டு - அரையைக் கடைசியாகக் கொண்டு; அமைவுற்ற முக்கோடி ஆயுவும் - மூன்று கோடி ஆயுளுக்கும்; பேர் அறிஞர்க்கேயும் - பெருமை பெற்ற அறிஞர்களாலும், உரை கடையிட்டு அளப்பு அரிய - வாய் வார்த்தைகளால் முடிவு காட்டி அளக்க முடியாத; பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு - பெருவலிமை கொண்ட (உன்) தோள் ஆற்றலுக்கு; உலப்பு இல்லை - அழிவு இல்லை (என்று நினைத்து); தவப் பயனின் பெருமை பார்ப்பேன் - தவங்களின் பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப் பெருமை கொண்டிருந்தவளாகிய நான்; திரை கடையிட்டு அளப்பு அரிய - அலைகளின் முடிவு காட்டி அளக்க முடியாத; வரம் என்னும் பாற்கடலை - (உன்) வரங்கள் ஆகிய பாற்கடலை; சீதை என்னும் பிரை - சீதா தேவியாகிய பிரையானது; கடையிட்டு - இறுதியில் இடப்பட்டு; அழிப்பதனை - அழிக்கப்போவதனை; அறிந்தேனோ - அறிந்தேன் இல்லையே!

அரை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி அரையைக் கடைசியில் கொண்ட மூன்று என்னும் கோடி இராவணன் கடைசியில் வாழ்ந்தது அரைக் கோடி 9899ஆம் பாடல் உரை பார்க்க. ஆயு - ஆயுள் கடைக் குறைந்தது. இராவணன் பெற்ற வரம் பாற்கடல் போல் விரிந்திருந்தும் சீதையென்னும் சிறு பிரைத் துளியால் பாற்கடல் முழுதும் அழிந்து கெட்டது என்று உருவகித்தார். முற்றுருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Your life-span of three crores of years, with a half added at the end; the mighty strength of your arms,
  2. which even the greatest sages could not measure to its end in words — I thought there was no end to them;
  3. did I know that the ocean of milk that was your boons, which no one could measure to the last of its waves,
  4. would be spoiled by the drop of curd called Cītai, dropped into it at the end — I who gazed at the greatness of the fruits of penance?'

What the poem says

Vaṇṭōtari had been sure that her husband's immense life-span and the measureless strength of his arms could never end, and she took pride in the boons his penance had won. She never imagined what would happen.

The verse ends in a sustained metaphor: his boons were a boundless ocean of milk, and Cītai was the drop of curd that, once added, turned the whole ocean sour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arai kaṭai iṭṭu amaivuṟṟa mukkōṭi āyuvum pēr aṟiñarkkēyum
urai kaṭaiyiṭṭu aḷappa ariya pēr āṟṟal tōḷ āṟṟaṟku ulappō illai
tirai kaṭaiyiṭṭu aḷappa ariya varam eṉṉum pāṟkaṭalaic cītai eṉṉum
pirai kaṭai iṭṭu aḻippataṉai aṟintēṉō, tavap payaṉiṉ perumai pārppēṉ?