கம்பராமாயணம் 10005 · யுத்த 36.244
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று அழைத்தனள் - என்று கூவி அழுதவளாய், ஏங்கி - ஏக்கமுற்று; எழுந்து - எழுந்து; அவன் - அந்த இராவணனின்; பொன் தழைத்த - பொன் அணிகள் தழைத்துக் கிடக்கிற, பொரு அருமார்பினை - ஒப்புரைக்க இயலாத (வீர) மார்பினை; தன் தழைக்கைகளால் தழுவி - தன் தளிர் போன்ற (மெல்லிய) கரங்களால் தழுவி; தனி நின்று - தனித்து நின்று; அழைத்து உயிர்த்தாள் - அழைத்தவாறு பெருமூச்சு விட்டவளாய், உயிர் நீங்கினாள் - உயிர் நீத்தாள்.
இப்பிறவியில் உன்னை அணைப்பது இதுவே இறுதியென்று, பொன் தழைத்த அவன் திருமார்பினைப் புல்லி, இனி அது இல்லை எனும் எண்ணம் வந்தவுடன், நெஞ்சு துடிப்பு நின்று விட்டதாகலின், "தழுவி உயிர்த்து உயிர் நீங்கினாள்" என்றார். பெருமூச்சுவிட்டாள். (உயிர் மூச்சுவிட்டாள். மாசு மறுவற்ற மண்டோதரியின் தூய கற்புப் பெருக்கினை எண்ணி வியந்த நம் முன்னோர்கள், மண்டோதரியை தூய பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாய்ச் சேர்த்துள்ளனர் என்பதை இங்கு நினைக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So she cried out; and, sighing, she rose, and his
- matchless chest, rich with gold ornaments,
- she clasped with her tender, leaf-soft hands, and standing alone,
- she called to him, breathed a long sigh, and her life left her.
What the poem says
Vaṇṭōtari ends her lament, rises, and embraces her husband's gold-adorned chest one last time with her soft hands. She calls out to him, heaves a deep sigh, and dies on the spot: knowing she will never hold him again, her heart simply stops.
The commentary recalls that, honouring her purity and devotion, tradition counts Vaṇṭōtari among the five revered women, the pañcakaṉṉikai.