கம்பராமாயணம் 10007 · யுத்த 36.246

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈமம் விதிமுறையால் தொகுத்து
இன்னல் நெஞ்சினொடு அஞ்சலித்து ஏற்றினான்.

பொருள் · Meaning in Tamil

பின்னர் - (இதற்கும்) பின்பு; வீடணன் - வீடணன்; வரன் முறையால் - மரபு வழிப்படி; வன்னி கூவி - அக்கினியை ஆவாகனம் செய்து; மறை சொன்ன - வேதம் விதித்துள்ள; ஈம விதிமுறையால் - ஈமக்கடன் விதிகளின் படி; தொகுத்து - (சடங்குப் பொருள்களாக்கி கூட்டி; இன்னல் நெஞ்சினொடு - துயரம் மிக்க உள்ளத்தோடு; பேர் எழில் தம்முனை - பேரழகினனாகிய தம் முன் பிறந்த அண்ணனாகிய இராவணனை; இந்தனத்து ஏற்றினான் - ஈம விறகின்மேல் ஏற்றி வைத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then Vīṭaṇaṉ took his elder brother of great beauty,
  2. called upon the fire in the hallowed order,
  3. gathered all as the funeral rule the Vedas speak prescribes,
  4. and with a grieving heart laid him upon the pyre.

What the poem says

After Irāvaṇaṉ's death, his younger brother Vīṭaṇaṉ performs the last rites. He invokes the sacred fire in the traditional way, assembles the ritual materials as Vedic funeral law requires, and with a heavy heart places his brother's body on the pyre of firewood. Even in death the poet calls Irāvaṇaṉ a man of great beauty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉar vīṭaṇaṉ pēr eḻil tammuṉai
vaṉṉi kūvi varaṉmuṟaiyāl maṟai
coṉṉa īma viti muṟaiyāl tokuttu
iṉṉal neñciṉoṭu intaṉattu ēṟṟiṉāṉ.