கம்பராமாயணம் 1001 · பால 15.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓர் தண்டு போல் புயத்தான் - தண்டாயுதம் போன்ற தோள்களையுடையான் ஒருவன்; வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி - வண்டுகள் தங்குகின்ற கூந்தலையுடைய (தன்) மனையாட்டியின் முகத்தைப் பார்த்து; அவள் தொண்டைவாயில் - அவளுடைய தொண்டைக் கனி போன்ற வாயில்; துடிப்பு ஒன்று சொல்ல - துடித்த துடிப்பு (குறிப்பால்) ஒன்றை உணர்த்த; கோபம் உண்டு என்று - (இவள் மனத்தில்) சினம் உண்டு என்று; உள்ளத்து உணர்ந்து தடுமாறினான் - உள்ளத்தால் உணர்ந்து (அதனை நீக்கும் நெறி தெரியாமல்) தடுமாற்றம் கொண்டான்.
வழக்கமாய் மாலையணிந்து பொலியும் தோள்களையுடையவன், வெறுந்தோளனாய் வருதலால், மாலையை யார்க்கு ஈந்தானோ என்று ஐயுற்று இதழ் துடிக்கச் சினங் காட்டினாள் என்பது குறிப்பால் தோன்ற “அவள் தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்ல” என்றார். வீர மார்பினர் ஆயினும் மெல்லிய பெண்மையின் சினத்தால் வீரமிழந்து தவித்தான் என்பார், “தண்டுபோல் புயத்தான் தடுமாறினான்” என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he looked upon the face of her whose tresses are a home for bees,
- a man with arms like a mace was thrown into confusion,
- knowing in his heart that she was angry,
- for a single tremor on her lips, red as the toṇṭai fruit, told him so.
What the poem says
A strong man, his shoulders like a war-club, comes back to his wife and sees her lip quiver. He understands at once that she is angry and does not know what to do.
The poet leaves the cause unstated, but it is easily guessed. His shoulders, usually hung with a garland, are bare, and she suspects he has given it to another woman. A hero who fears no enemy is undone by the small anger of a gentle woman.