கம்பராமாயணம் 1002 · பால 15.39

Section பால காண்டம் / 15. பூக்கொய் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏயும் தன்மையர் - (இதுகாறும் கூறியவாறு பூக்கொய்தலும் புலவி கொள்ளுதலும் முதலிய) செய்கைகளை மேற்கொண்டவர்களான; இவ் வகையார் எலாம் - இத்தகைய ஆடவரும் பெண்டிரும்; தூய தண் நிழல் சோலை - தூய்மையுடைய குளிர்ந்த நிழலைத் தரும் அச்சோலையிலே; துறுமலர் வேயும் செய்கை வெறுத்தனர் - நெருங்கிய மலர்களைப் (பறித்துச்) சூடுகின்ற செயலின்மேல் விருப்பமில்லாதவர் ஆயினர்; வெண்திரை பாயும் தீம்புனல் பண்ணை - வெள்ளை அலைகள் பாயும் இனிய நீரில் விளையாடுவதில், சென்று எய்தினார் - (மனம்) சென்றதனால் (நீர்நிலைகளை) அடைந்தார்கள்.

துறுமலர் - வினைத்தொகை. புனல்பண்ணை: நீர்விளையாட்டு. பழகப் பழகப் பாலும் புளிக்கும் ஆதலின் மலர்வேயும் செய்கையும் வெறுத்தனர் என்றார். செயல்மாற்றம் சோர்வு மாற்றும் ஆதலின் பூக் கொய்தோர் இனிப் புனல் விளையாடப் போகின்றனர் என அடுத்தப் படலத்துக்குத் தோற்றுவாய் அமைத்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All those of this kind, engaged in such pursuits,
  2. grew weary of decking themselves with the crowded blossoms
  3. of the grove with its pure, cool shade, and went off
  4. to sport in the sweet waters where white waves leap.

What the poem says

This is the last verse of the canto on flower-gathering. The men and women who have spent the afternoon picking flowers, adorning one another and quarrelling as lovers do grow tired of it all. Even milk turns sour if you have it too often.

So they leave the shady grove for the water, and the verse leads into the next canto, which describes their games in the river and pools.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēyum taṉmaiyar iv vakaiyār elām,
tūya taṇ niḻal cōlait tuṟu malar
vēyum ceykai veṟuttaṉar, veṇ tirai
pāyum tīm puṉal paṇṇai ceṉṟu eytiṉār.