கம்பராமாயணம் 10010 · யுத்த 36.249
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குடம் கொள் நீரினும் - குடம் கொண்ட நீரை விட மிகுதியாக; கண் சோர் குமிழியான் - குமிழியிட்டுக் கண்ணீரைக் கொட்டும் வீடணன்; கடன்கள் செய்து முடித்து - இறுதிக் கடன்களையெல்லாம் செய்து முடித்தபின்; கணவனோடு உடைந்து போன - கணவனுடனே (தன் நெஞ்சம் உடைந்து மாண்டு போன; மயன் மகளோடு உடன் - மயனின் மகளாகிய மண்டோதரியுடன்; அடங்க - (அந்த இராவணன் உடல்) அடங்குமாறு; வெங்கனலுக்கு - கொடுந்தீக்கு; அவியாக்கினான் - உணவாக்கினான்.
உயிரோடு கட்டையேறுதல் தவிர்த்து, தன் கற்பால் உயிர் பிரித்து, உடன் கட்டையேறினாள் மண்டோதரி. இதனைத் "தலைக்கற்பு” என்பர் சான்றோர். நெருப்புக்கு இரையாக்கினான் என்னாமல் அவியாக்கினான் என்று குறித்த நயம் உணர்க. கற்பொழுக்கம் பேணிய மண்டோதரியும் அவள் கணவனும் வானோர்க்கு நல்விருந்து என்பார் "அவி" என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having completed the rites, together with Mayaṉ's daughter
- who had broken and died along with her husband,
- he gave him whole as an offering to the fierce fire,
- he whose eyes poured bubbling tears more than water from a pot.
What the poem says
Vīṭaṇaṉ, weeping in floods, finishes the rites and commits Irāvaṇaṉ's body to the flames together with Maṇṭōtari, daughter of Mayaṉ, whose heart broke and who died beside her husband. She did not mount the pyre alive; her chastity alone parted her life from her body, which tradition counts as the highest fidelity. The poet says the fire received them as an oblation rather than as prey, as if the faithful wife and her husband were a worthy feast for the gods.