கம்பராமாயணம் 1005 · பால 16.3

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மைய ஆம் குவளை எல்லாம் மாதர்கள் மலர்க் கண் பூத்த,
கைய ஆம் உருவத்தார் தம் கண் மலர் குவளை பூத்த,
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த,
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்று ஏ.

பொருள் · Meaning in Tamil

மை அவாம் குவளை எல்லாம் - கருமையை விரும்புகின்ற குவளை மலர்கள் யாவும்; மாதர் கண்மலர்கள் பூத்த - அம்மகளிரின் கண்மலர்களைப் போலப் பூத்தன; உருவத்தார் தம் கை அவாம்கண் - அழகினையுடைய அம்மகளிரின் உள்ளங்கைகளைப்போல் பெரிதாக விரும்பிய அவர் கண்கள்; மலர்க் குவளை பூத்த - மலர்ந்துள்ள குவளைகளைப் போல விளங்கின; செய்ய தாமரைகள் எல்லாம் - செந்தாமரை மலர்கள் எல்லாம்; தெரிவையர் முகங்கள் பூத்த - மங்கையரின் முகங்களைப் போலப் பூத்தன; தையலார் முகங்கள் - அம்மாதர்களுடைய முகங்கள்; செய்ய தாமரை பூத்த - செந்தாமரை மலர்போல் விளங்கின.

குவளைகள் மாதர் கண் போன்றவையாயினும், அஞ்சன மை அவற்றிற்குக் கிட்டா ஆதலின், “மை அவாம் குவளை எல்லாம்” என்றார். அவாம் அவாவும்; விரும்பும். செய்யும் என்னும் எச்சம். மகளிர் கைகள், முகங்கட்குப் பூத்தல் என்பது விளங்கல் என்னும் பொருளது. இவற்றிற்கு வேறே உவமைகள் கிடையா; ஒன்றற்கொன்றே உவமையாம் எனச் சிறப்பித்தவாறு. மகளிர் கண்கட்கு உள்ளங்கை உவமை. “குடங்கை போல் உண்கண்” (சீவக. 342) “ஒல்கிப் போய் மாடம் சார்ந்தார் ஒரு தடங்குடங்கைக் கண்ணார்” (சீவக. 2535). இங்ஙனம், உவமையையும், பொருளையும் ஒன்றற்கு ஒன்று உவமான உவமேயங்களாகச் சொல்வதைப் புகழ் பொருள் உவமை என்பர் அணிநூலார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the lilies that long for kohl bloomed like the flower-eyes of the women;
  2. the eyes of those lovely ones, wide as their palms, bloomed like flowering lilies;
  3. all the red lotuses bloomed like the faces of the young women;
  4. and the faces of the maidens bloomed like red lotuses.

What the poem says

As the women step into the pools, flowers and women mirror each other. The blue lilies look like the women's eyes, but they envy those eyes their kohl, which no flower can wear. The women's eyes, large as a cupped palm, look like lilies. The red lotuses look like their faces, and their faces like the lotuses.

Here each thing is the only fit comparison for the other, and nothing else will do for either. Rhetoricians call this a reciprocal simile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maiya ām kuvaḷai ellām mātar kaṇmalarkaḷ pūtta,
kaiya ām uruvattārtam kaṇmalark kuvaḷai pūtta,
ceyya tāmaraikaḷ ellām terivaiyar mukaṅkaḷ pūtta,
taiyalār mukaṅkaḷ ceyya tāmarai pūtta aṉṟē.