கம்பராமாயணம் 10089 · யுத்த 37.76

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேத! - வேத வடிவினன் ஆகிய பெருமானே!; ஆதலின் - உலகியல்பு இவ்வாறு இருத்தலின்; இனி புறத்து யாருக்காக என் கோது அறு தவத்தினைக் கூறிக் காட்டுகேன் - இனிமேல் வெளியில் வேறு யாருக்காக என் குற்றமற்ற தவத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும்; சாதலின் சிறந்தது ஒன்று இல்லை - சாவதைக் காட்டிலும் எனக்கு நற்பயன் தருவது வேறு இல்லை; நின் பணி தக்கதே - நீ இட்ட கட்டளையும் அதுவே, எனக்குத் தகுதியானதே; விதியும் அது - என் விதியும் அதுவே; என்றனள் -.

இப்படலத்து 68ஆம் பாடலில் இராமன் கூற்றாக 'சாதியால்' என்று வந்த வார்த்தைக்கு 'சாவாயாக' என்று பொருள் கொண்டு, 'நின்பணி தக்கதே' என்றாளாகக் கொள்ளலாம். அங்கே 'சாதி' என்பது 'சான்று கொண்டு நிரூபி' என்று பொருள்பட்டது. சாதித்தலால் வேறு பயனில்லை என்றபொழுது சாதலே தக்கது என்றவாறாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Therefore, for whose sake now should I set out and show
  2. to those outside my flawless penance?
  3. There is nothing better than to die; your command
  4. is fitting, O Veda; that is my fate as well, she said.

What the poem says

Since no one can see into her heart, Cītai asks for whose sake she should try to prove her purity. Death is best; Irāmaṉ's command is right, and it is also her destiny. She takes Irāmaṉ's earlier word cāti, prove it, in its other sense, die, and accepts it: if proof is useless, death is what remains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ātaliṉ puṟattu iṉi yārukkāka eṉ
kōtu aṟu tavattiṉaik kūṟik kāṭṭukēṉ?
cātaliṉ ciṟantatu oṉṟu illai; takkatē
vēta! niṉ paṇi; atu vitiyum ‘eṉṟaṉaḷ.