கம்பராமாயணம் 1009 · பால 16.7

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பண் உள பவளம் தொண்டை பங்கயம் பூத்தது அன்ன,
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலாக் கரும்பின் அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி, 'ஓடும் நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம் கொல்' என்று, கணவரை வினவுவாரும்.

பொருள் · Meaning in Tamil

பவளத் தொண்டை - பவளத்தையும் கொவ்வைக் கனியையும்; பங்கயம் பூத்தது என்ன - தாமரைப் பூ, தன்னிடத்தே பூத்தது போன்ற, பண்உளர் வண்ணவாய் - இசை ஒலிக்கும் அழகிய வாயினையும்; குவளை வாள்கண் - குவளைமலர்போன்ற ஒளிமிக்க கண்களையும்; இலா மருங்கு கரும்பின் அன்னார் - இல்லையென்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினையுமுடைய கரும்பு என(க் கணவர்க்கு) இனிக்கத்தக்க மகளிர்; உள்நிறை கயலைநோக்கி - (தடாகங்களின்) உள்ளே நிறைந்துள்ள கயல்மீன்களைப் பார்த்து; நீர்த்தடங்கட்கு எல்லாம் - நீர்நிலைகட்கு எல்லாம்; ஓடும் கண்உள ஆம்கொல் என்று - ஓடிக் கொண்டேயிருக்கும் கண்கள் உளவோ என்று (ஐயுற்று), கணவரை வினவுவாரும் - தங்கள் கணவரைக் கேட்பவர்களும்.

“பேதைமை என்பதும் மாதர்க்கு ஓர் அணிகலம்” ஆதலின், கயல் மீன்களை, நீர்நிலைகளின் கண்களோ? என்று கேட்டதும், அதனால் ஓர் அழகாயிற்று. பின்வருவனவற்றிற்கும் இவ்வாறே கொள்க. கொவ்வைக் கனியையும் பவளத்தையும் தன்னகத்தே கொண்டு தாமரை பூத்தது போல் சிவந்த இதழ்களைக் கொண்டது முகம் என்றார். இல்பொருள் உவமையணி. கரும்பை மகளிர்க்கு உவமையாக்குதல் மரபு. “உண்பார்க்கு மெய்முழுதும் இனிதாயிருத்தலின் கரும்பு என்றார்” என்பார் நச்சினார்க்கினியர் (சீவக. 2453, உரை). அவர் பேச்செல்லாம் இசையாய் முடிதலின் “பண் உளர் வாய்” என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Women whose lovely mouths, where music stirs, were like a lotus blooming with coral and the toṇṭai fruit,
  2. with bright lily eyes, with waists that are not there, like sugarcane,
  3. gazing at the kayal fish that filled the water, said, 'Do all these pools
  4. have eyes that keep darting about?', and so questioned their husbands.

What the poem says

The women, sweet as sugarcane to their husbands, with mouths whose every word sounds like music, see the darting kayal fish in the pools. Since women's eyes are always compared to these fish, they innocently ask their husbands whether the pools have eyes too.

Charming simplicity was counted an ornament in a woman, and the question pleases for that reason. The face is likened to a lotus that has somehow put forth coral and red toṇṭai fruit for lips. No such lotus exists, so this is a simile built on an imagined object.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇ uḷar pavaḷat toṇṭai paṅkayam pūttatu aṉṉa,
vaṇṇa vāy kuvaḷai vāḷ kaṇ maruṅku ilāk karumpiṉ aṉṉār,
uḷ niṟai kayalai nōkki, 'ōṭu nīrt taṭaṅkaṭku ellām
kaṇ uḷa āmkol' eṉṟu, kaṇavarai viṉavuvārum.