கம்பராமாயணம் 1010 · பால 16.8

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேன் நகு நறவ மாலைச் செறி குழல் தெய்வம் அன்னாள்,
தான் உடைக் கனக மேனி, தடத்து இடை தோன்ற நோக்கி,
'நான் நக நகுகின்றாள் இந் நல் நுதல் தோழியாம்' என்று,
ஊனம் இல் முலையின் ஆரம், உளம் குளிர்ந்து உதவுவாளும்.

பொருள் · Meaning in Tamil

தேன் நகும் நறவமாலை - வண்டுகள் (உண்டு) மகிழும் தேனையுடைய மலர்மாலை (யணிந்த); செறிகுழல் தெய்வம் அன்னாள் - அடர்ந்த கூந்தலையுடைய தேவதையை ஒத்தாள் ஒருத்தி; தான் உடைக் கோலமேனி - தான்கொண்ட அழகிய உடல்; தடத்திடைத் தோன்ற நோக்கி - தடாகத்தில் (நிழலாகத்) தோன்றுவதைப் பார்த்து; இந்நல்நுதல் நான்நக நகுகின்றாள் - இந்த நல்ல நெற்றியுடையாள் நான் சிரிக்கும் போதெல்லாம் சிரிக்கின்றாள்; தோழி ஆம் என்று - (ஆகவே இவள்) என்னுடைய தோழி யாவாள் என்று கூறி; விலையின் ஊனம் இல் ஆரம் - விலை மதிப்புடைய குற்றமற்ற (முத்து) மாலைகளை (நிழல் தோழிக்கு); உளம் குளிர்ந்து உதவுவாரும் - மனம் உவந்து கொடுத்து நிற்கின்றவர்களும்.

இன்பத்தில் இன்பமும், துன்பத்தில் துன்பமும் கூறுதல் உயிர்த்தோழியர் இயல்பு ஆதலின், “நான்நக நகுகின்றாள் இந்நன்னுதல் தோழியாம்” என்றாள். தேன் ஒருவகை வண்டு. இது நல்ல மணத்தே செல்லும் எனவும் ஊற்றறிவு முதலிய ஐயறிவும் இதற்கு உண்டு எனவும் நச்சினார்க்கினியர் கூறுவார் (சீவக. 892, உரை). குற்றமற்ற விலைமதிப்புடைய முத்துமாலையை உளம் குளிர்ந்து ஒரு பெண்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A woman like a goddess, her thick tresses wound with a garland whose honey delights the bees,
  2. seeing her own lovely form appear in the pool,
  3. said, 'This girl with the fair brow laughs whenever I laugh, so she must be my friend,'
  4. and, her heart glad, gave her a flawless necklace beyond price.

What the poem says

One woman in the pool sees her reflection in the water. She notices that the girl in the water laughs every time she laughs. A true friend shares your joy and your sorrow, so she decides this girl must be her friend, and happily hands her a priceless pearl necklace.

The poet uses the woman's charming innocence, a grace often praised in women, for gentle comedy. The necklace, of course, sinks into the pool.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēṉ naku naṟava mālaic ceṟikuḻal teyvam aṉṉāḷ,
tāṉuṭaik kōla mēṉi, taṭattiṭait tōṉṟa nōkki,
'nāṉ naka nakukiṉṟāḷ in nal nutal tōḻi ām' eṉṟu,
ūṉam il vilaiyiṉ āram, uḷam kuḷirntu utavuvārum.