கம்பராமாயணம் 1011 · பால 16.9

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1குண்டலம் திருவில் வீசக், குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும் மெல் மயில் கணங்கள் போல,
வண்டு உளர் கோதை மாதர், மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசையால் கரை சார்கின்றாரும்.

பொருள் · Meaning in Tamil

வண்டுளர் கோதை மாதர் - வண்டுகள் ஒலிக்கின்ற மலர்மாலை யணிந்த மகளிர்; மைந்தர்தம் வயிரத் திண்தோள் - ஆடவர்களின் வயிரம்போல் வலிமை பொருந்திய திண்ணிய தோள்கள் என்னும்; தண்டுகள் தழுவும் ஆசை - (கடைந்தெடுத்த அழகு பொலியும்) தண்டாயுதங்களை (தோள்களை) ஆசையோடு தழுவிக்கொண்டு; விண்தொடர் வரையின் வைகும் - வானத்தையளாவுகின்ற மலைகளில் வாழும்; மென்மயில் கணங்கள்போல - மெல்லிய மயில் கூட்டங்கள் செல்வதுபோல; குண்டலம் திருவில் வீச - (செவிகளில் அணிந்த) குண்டலங்கள் வானவில்லினைப்போல் ஒளியுமிழ; குலமணி ஆரம் மின்ன - சிறந்த மணிமாலைகள் மின்னலைப்போல் ஒளிசிந்த; புனல் கரை சேர்கின்றாரும் - நீர்நிலையின் கரைகளை அடைகின்றவர்களும்.

புனல் - ஆகுபெயர். திருவில் - வானவில். வரையின் வைகும் மயிற்கணங்கள் போல, தரையின் வைகும் மயிற்கணங்கள் புறப்பட்டன என்பது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With earrings flashing like the rainbow and necklaces of fine gems gleaming like lightning,
  2. like flocks of gentle peacocks that dwell on mountains reaching to the sky,
  3. women wearing garlands where bees hum, longing to clasp the clubs
  4. that were the strong, diamond-hard shoulders of their men, came up to the bank of the water.

What the poem says

Some of the women, wanting to hold their husbands, come out of the water and make for the bank where the men are. The men's shoulders, hard as diamond, are pictured as war-clubs.

Their earrings flash like rainbows and their gem necklaces like lightning. Peacocks are said to dance when the rainy sky shows rainbow and lightning, and the women come up like a flock of peacocks from the mountains, except that these peacocks live down on the plain, in a city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṇṭalam tiru vil vīca, kulamaṇi āram miṉṉa,
viṇ toṭar varaiyiṉ vaikum meṉ mayiṟ kaṇaṅkaḷ pōla,
vaṇṭu uḷar kōtai mātar, maintartam vayirat tiṇ tōḷ
taṇṭukaḷ taḻuvum ācaip puṉaṟ karai cārkiṉṟārum.