கம்பராமாயணம் 101 · பால 3.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விளிம்பு சுற்றும் வெள்ளிக்கட்டி முற்றுவித்து - அந்த அகழியின் ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து; உள்ளுறப் பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப்படுத்தலின் - உள்ளிடமெல்லாம் பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே; “தளிந்த கல்தலத்தொடு - பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு; அச்சலத்தினை - அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை; தனித்துறத் தெளிந்து உணர்த்துகிற்றும்” என்றல் - தனியாக வேறு பிரிந்து இது நீர் இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம் என்று சொல்வது; தேவராலும் ஆவதோ - தேவர்களாலும் இயலாததொன்றாகும்.
அகழியின் விளிம்பு வெள்ளி - தளம் பளிங்கு, தெளிந்த நீர் எனவே நீருக்கும் பளிங்குக் கற்களுக்கும் வேறுபாட்டை அறிவது தேவர்களாலும் ஆகாதது என்பது கருத்து. இங்கே அகழியின் நீர் தெளிவாக இருப்பதாகக் குறிப்பவர் முன்னே (106) கலங்கியிருப்பதாகக் குறித்திருக்கிறார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Its rim all round was built up wholly of silver, and within,
- crystal was laid as paving along its floor;
- so to say, 'We can tell that clear water apart from the crystal-paved bed
- and show plainly which is which' — is that within the power even of the gods?
What the poem says
The moat is edged with silver and floored with crystal. Its water is so clear that not even the gods could say where the water ends and the crystal begins.
The commentary notes a small inconsistency. Here the water is crystal clear, but an earlier verse called the moat 'as unclear as a worthless poem'.