கம்பராமாயணம் 100 · பால 3.19

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானை ஆ
தாள் உலாவு வெம் கதத் துரங்கமும் தரங்கம் மா
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானும் ஏ.

பொருள் · Meaning in Tamil

ஆளும் அன்னம் வெண்குடைக் குலங்களா - அங்குத் திரியும் அன்னங்கள் வெண்குடைக் கூட்டங்களாகவும்; அருங்கராக் கோளெலாம் உலாவுகின்ற குன்றம் அன்னயானையா - உலாவித் திரியும் மலை போன்ற யானைகளாகவும்; தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா - தாளுடன் அசையும் தாமரையை உடைய அலைகளே குதிரைகளாகவும்; மீனம் வாளும் வேலுமா - மீன்களே வாளும் வேலுமாகவும்; மன்னர் சேனை மானும் - அரசரின் படைகளை ஒத்திருக்கும்.

அன்னங்களே வெண் குடையாகவும், முதலைகள் யானைகள், அலைகள் குதிரைகள் - மீன்கள் வாளும் வேலுமாக விளங்கி அகழியானது மன்னர் சேனை போன்றிருந்தது என்கிறார். உருவக அணியை அங்கமாக உடைய உவமை அணி.

துரங்கம் - வேகமாகச் செல்வது. எனவே குதிரையாகும். தரங்கம் - அலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the swans that roam there as rows of white parasols, the fierce crocodiles
  2. as elephants like moving hills,
  3. the waves with their stalked lotuses as horses,
  4. and the fish as swords and spears, the moat resembled the army of a king.

What the poem says

The whole moat is read as a royal army on the march. The white swans are the white parasols carried over the king, the crocodiles are the war elephants, the lotus-strewn waves are the cavalry, and the darting fish are the swords and spears of the foot soldiers.

The Tamil plays on the rhyming words for wave and horse. A horse is called 'the swift-going one'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḷum aṉṉam veṇ kuṭaik kulaṅkaḷā, aruṅ karāk
kōḷ elām ulāvukiṉṟa kuṉṟam aṉṉa yāṉaiyā
tāḷ ulāvu paṅkayat taraṅkamum turaṅkamā
vāḷum vēlum mīṉam āka maṉṉar cēṉai māṉumē.