கம்பராமாயணம் 10121 · யுத்த 37.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முதலோய்! - எல்லாவற்றுக்கும் மூலமானவனே!; என் உருக்கொடு இவ் உலகினை ஈனுதி - பிரமனாகிய என் வடிவம் கொண்டு இந்த உலகத்தை உண்டாக்குகிறாய்; இடையே - நடுவில்; உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி - திருமாலாகிய உன் வடிவத்தை எடுத்துக் கொண்டு புகுந்து நின்று பாதுகாக்கிறாய்; உமை கோன் தன் உருக்கொடு துடைத்தி - உமாதேவியின் கணவராகிய சிவபெருமான் வடிவம் கொண்டு அழிக்கிறாய்; மற்று இது - நீ செய்யும் இச்செயல்; தனி அருக்கன் - ஒப்பற்ற ஒருவனாகிய சூரியன்; முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது - கருதிய உருவம் கொண்டு காலையில் பகலை உண்டாக்கி, உச்சத்தில் பகலை நடத்த நிறுத்தி, தனது மறைவால் மாலையில் பகலை முடித்தல் போல உள்ளதாம்.
காலைச் சூரியன், உச்சிச் சூரியன், மாலைச் சூரியன் என்று மூன்றாகாது ஒன்றாதல் போல மும்மூர்த்திகளாக அதிட்டித்து நின்று முத்தொழிலும் செய்வான் ஒருவனே என்றார் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking my form you bring forth this world; in between,
- entering in your own form, you stand and preserve it; in the form
- of Umai's lord you wipe it away; and this is of the same kind
- as the lone sun making the day in its forms, O First One.
What the poem says
Piramaṉ declares that the One Supreme creates the world in Piramaṉ's form, sustains it in his own form as Tirumāl, and destroys it in the form of Civaṉ, Umai's consort. It is like the single sun, which makes the morning, holds the noon and ends the day at evening, yet is not three suns but one. So the one God performs the three cosmic functions through the three deities.