கம்பராமாயணம் 10120 · யுத்த 37.107

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின்னைக் காட்டுதல் போல் வந்து விளியும் இவ் உலகம் தன்னைக் காட்டவும் - வானம் மின்னலைக் காட்டுதல் போல தோன்றி உடனே மறையும் இந்த உலகத்தைக் காட்டவும்; தருமத்தை நாட்டவும் - இவ்வுலகில் தருமத்தை நிலை நிறுத்தவும்; தனியே - உன்னின் வேறாக; என்னைக் காட்டுதி - என்னைப் படைக்கிறாய்; இறுதியும் காட்டுதி - எனக்கு அழிவையும் உண்டாக்குகிறாய்; எனக்கும் -; உன்னைக் காட்டலை - உலக காரணமானவனாகிய உன் உண்மை நிலையைக் காட்டுவாயல்லை; ஒளிக்கின்றும் இலை - மறைத்திருக்கின்றாயும் இல்லை; மறை உரை - இவை அனைத்தையும் வேதங்கள் கூறுகின்றன.

ஆல், அசை. 'மறை உரையால்' நான் உன்னை அறிதலின் ஒளிக்கின்றாயும் அல்லை என்றும் உரை கூறுவர். தோன்றிய உடனே மறையும் மின்னல் போல என்பதால் சகம் என்பர். சகம் - நிலையற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To bring forth this world that comes and dies like a flash of lightning,
  2. and to establish dharma, you bring me forth apart from you,
  3. and you bring my end as well; even to me
  4. you do not show yourself, nor do you hide, by the word of the Veda.

What the poem says

Piramaṉ says that to manifest the world, which appears and vanishes like lightning, and to establish dharma, Irāmaṉ creates Piramaṉ as a separate being and also brings about his end. Even to Piramaṉ he does not fully reveal himself, yet he is not hidden either, since the Vedas make him known. The world is called fleeting because, like lightning, it is gone as soon as it appears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'miṉṉaik kāṭṭutalpōl vantu viḷiyum iv ulakam
taṉṉaik kāṭṭavum, tarumattai nāṭṭavum, taṉiyē
eṉṉaik kāṭṭuti; iṟutiyum kāṭṭuti; eṉakkum
uṉṉaik kāṭṭalai; oḷikkiṉṟum ilai, maṟai uraiyāl.