கம்பராமாயணம் 10119 · யுத்த 37.106

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை - தோன்றுதல் என்பதாகிய தன்மை உனக்கு இல்லை (அநாதி); ஆற்றல் சால் முதற்பகுதி நின்கணே தோற்றும் - வலிமை மிக்க மூலப்பிருகிருதி மாயை என்ற தத்துவம் நின்னிடத்திருந்து வெளிப்படும்; மற்று அதனுள் ஆம் பண்பால் - பின்னர் அதின் உள்ளிருந்து ஒன்றொன்றாக வெளிப்படும் முறையால்; காற்றை முன்னுடைய் பூதங்கள் - காற்று, ஆகாயம் முதலாகிய ஐம்பூதங்கள் தோற்றும்; கடைக்கால் - ஊழிமுடிவில்; அவை சென்று வீற்று வீற்று உற்று வீவுறும் - ஒன்று ஒன்றுக்குள் ஒடுங்கி அழிந்து போகும்; நீ என்றும் விளியாய் - நீ எப்பொழுதும் அழியமாட்டாய்.

தோற்றமும் இறுதியும் பரம்பொருளுக்கு இல்லை என்பதும், தத்துவங்களுக்கு அவ்விரண்டும் உண்டு என்பதும் கூறப் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no such thing as a beginning for you; in you appears
  2. the mighty primal Prakṛti; and from within it, in due order,
  3. the elements with wind at their head arise; at the end
  4. they go and perish, each one apart; you never die.

What the poem says

Irāmaṉ has no beginning. Primal Prakṛti emerges from him, and from it, one after another, the elements, wind, space and the rest, come forth; at the end of the age they dissolve back, each into the one before, and perish. He alone never perishes. Birth and death belong to the principles of the world, never to the Supreme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tōṟṟam eṉpatu oṉṟu uṉakku illai; niṉkaṇē tōṟṟum,
āṟṟal cāl mutaṟ pakuti; maṟṟu ataṉuḷ ām, paṇpāl
kāṟṟai muṉṉuṭaiy pūtaṅkaḷ; avai ceṉṟu, kaṭaikkāl,
vīṟṟu vīṟṟu uṟṟu vīvuṟum; nī eṉṟum viḷiyāy.