கம்பராமாயணம் 10118 · யுத்த 37.105

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கரணம் என்று உள உன்னை வந்து அறிவு காணாமே,
அரணம் அல்லவர்க்கு இவை கடந்து அறிவு அரிது ஆக,
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப; அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை, அன்னவை தவிர்ப்பான்.

பொருள் · Meaning in Tamil

அரணம் அல்லவர்க்கு - உன்னைத் தமக்குப் பாதுகாவலாகப் பற்றாதவர்களுக்கு; உன்னை வந்து அறிவு காணாமே - உன்னை நெருங்கி அறிவினால் அறிந்து கொள்ளாதபடி; கரணம் என்று உள - ஐம்பொறிகள் என்றுள்ளவைகள் பெருந்தடையாக ஆகும்; (அதனால்) இவை கடந்து அகல்வு அரிதாக - இப்பொறிகளைக் கடந்து மேற்சென்று அறிதல் முடியாததாக; மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப - இறப்பு பிறப்பு என்ற பாசவலைக்குட்பட்டு மீண்டும் மீண்டும் தடுமாறுவர்; அன்னவை தவிர்ப்பான் - அப்பிறப்பு இறப்புகளாகிய துன்பங்களை நீக்குதற்கு; அவர்க்கு - அவர்களுக்கு; உன் சரணம் அல்லது ஓர் சரண் இல்லை - உன் திருவடியிணைகள் அல்லாமல் வேறு ஓர் புகலிடம் இல்லை.

சரணாகதமே விவேக மார்க்கம் வேறு அன்று என்று பிரபத்தியைக் கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The senses, as they are called, keep the mind from coming to know you;
  2. for those who do not hold you as their refuge it is hard to pass beyond them,
  3. so they reel between death and birth; for them
  4. there is no refuge but your feet to end all that.

What the poem says

For those who do not take Irāmaṉ as their refuge, the senses block the way to knowing him, and unable to get past them they wander bewildered through death and rebirth. The only escape from that cycle is refuge at his feet. The verse states the doctrine of prapatti, self-surrender, as the true path of wisdom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘karaṇam eṉṟu uḷa uṉṉai vantu aṟivu kāṇāmē,
araṇam allavarkku ivai kaṭantu akalvu aritu āka,
maraṇam tōṟṟam eṉṟu ivaṟṟiṭai mayaṅkupa; avarkku uṉ
caraṇam allatu ōr caraṇ illai, aṉṉavai tavirppāṉ.