கம்பராமாயணம் 10117 · யுத்த 37.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துளவை ஆய் முடியாய்! - திருத்துளசியை ஆராய்ந்து எடுத்துச் சிறந்து அணிந்த திருமுடி உடைய திருமாலே; அளவையால் அளந்து - பிரமாணங்களால் ஆராய்ந்து அளவிட்டு; 'ஆம்' 'அன்று' என்று அறிவுறும் அமைதி, உளவை யாவையும் உனக்கு இல்லை - உண்டு என்றும் இல்லை என்றும் அறிவுறுத்தப்படும் தன்மை உடைய நிலைகள் எவையும் உன்னிடம் பயன்படா; இல்லையாகும்; உபநிடத்து - உபநிடதங்களில்; உனது களவை ஆய்ந்து உறத் தெளிந்திலது ஆயினும் - நீ எல்லாவற்றினும் மறைந்து அவையேயாய் இருந்து கொண்டிருக்கும் களவை ஆராய்ந்து உன்னை நன்கு காண இயன்றிலது ஆனாலும் அது; கண்ணால் 'நீ உளை' எனத் துணியும் - தன் ஞானக்கண்ணால் நீ அறியவாரா விடினும் இருக்கின்றாய் என்று அறுதியிட்டுக் கூறும்.
பிரமாணங்களால் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்ட பொருள்களைத் தான் ஆராய்தல் இயலும். பிரமாணங்களுக்கு அப்பாற்பட்ட பொருள்களை ஆராய இயலாது; கடலைப் படியால் முகந்தளத்தல் இயலாமை போல என்க. தன்னை அளக்கும் அளவைகளாகவும் அவனே இருக்கிற போது அளக்குமாறு எவ்வாறு? என்றார். உபநிடதம் சரீர சரீரி பாவத்தால் அந்தர்யாமியாய் உள்ள இறைவனைக் கட்புலனாக அறிய இயலாவிடினும் அனுமானத்தால் உண்டு என்று துணியும், பகலுக்கும் இரவுக்கும் இடையில் மாலை என்பது உண்டு என அறிதல் போல எனினும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- None of the settled ways of knowing that measure by proof
- and declare It is or It is not apply to you; though the Upaniṣad
- has not examined your hiddenness and seen it clearly,
- with its eye it is certain, You exist, O you of the chosen tulasi crown!
What the poem says
Piramaṉ says that the ordinary means of knowledge, which measure things and decide whether they are or are not, cannot measure the Supreme, just as a sea cannot be measured with a cup; besides, he is himself those very means. Even the Upaniṣads cannot fully trace how he hides within all things, yet with their eye of wisdom, or by inference, they are certain that he exists.