கம்பராமாயணம் 10116 · யுத்த 37.103

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘

பொருள் · Meaning in Tamil

ஐ அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து - பூதம் 5, புலன் 5, பொறி 5, கன்மேந்திரியம் 5, மகத், அகங்காரம், மனம், மூலப்பிருகிருதி, சீவன் 5 என்று கூறப்படும் ஐந்து ஐந்துகளாகிய இருபத்தைந்து தத்துவங்களையும் நன்கு ஆராய்ந்து அறிந்து; அவற்றின் மெய் எஞ்சாவகை மேல் நின்ற நினக்கு மேல் யாதும் பொய் எஞ்சா இலது - அவற்றைச் சரீரமாகக் கொண்டு சரீரியாக சிறிதும் குறைவு படாமல் நடத்தி மேலாய் நின்ற இருபத்தாறாவது தத்துவமாக நின்ற உனக்கு மேல் எதுவும் உண்மையாக இல்லை; என்னும் ஈது - என்கின்ற இவ்வுண்மையை; அருமறை புகலும் - அரிய வேதம் எடுத்துக் கூறும்; வய்யம் சான்று - இதற்கு இவ்வுலகமே (நின்னால் இயங்குதலின் நீ இன்றி இயங்காமையின்) சான்றாகும்; இனி சான்றுக்குச் சான்று இலை - சாட்சிக்கு இன்னொரு சாட்சி வேண்டுதல் இல்லை ஆதலின் இதை இனியும் நிரூபிக்க வேண்டியதின்று; வழக்கால் - இது வழக்கும் ஆகும்.

உலகு என்பது (வையம்) உயர்ந்தோர் மாட்டே ஆதலின் உயர்ந்தோர்களே சான்று எனலும் ஆம். பரம்பொருள் சரீரியாக இருந்து இருபத்தைந்து தத்துவங்களை சரீரமாகக் கொண்டு இயக்குவது என்பதாகிய சரீர சரீரி பாவம் இங்கு கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having examined and known the principles that are five times five,
  2. for you who stand above them so that nothing of their truth is wanting, there is nothing higher;
  3. no falsehood remains: this the rare Veda declares;
  4. the world is the witness; and a witness needs no witness, by right.

What the poem says

Piramaṉ says the Veda declares that, beyond the twenty-five principles of existence, which Irāmaṉ indwells and governs as a soul governs its body, there is nothing higher than him. The world itself, which moves only through him, is witness to this, or the wise are; and a witness needs no further witness. The verse expresses the doctrine that the universe is the body of the Supreme.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ai añcu ākiya tattuvam terintu aṟintu, avaṟṟiṉ
mey eñcāvakai mēl niṉṟa niṉakkumēl yātum
poy eñcā ilatu ‘‘ eṉṉum ītu aru maṟai pukalum;
vayyam cāṉṟu; iṉi, cāṉṟukkuc cāṉṟu ilai, vaḻakkāl.