கம்பராமாயணம் 10123 · யுத்த 37.110
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஓங்காரப் பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர் - பிரணவப் பொருளை ஆராய்ந்தறிகின்றவர்களே உன் உண்மையான சொரூபத்தை உணர்வாராவர் (அவர்கள்); ஓங்காரப் பொருள் என்று உணர்ந்து இருவினை உகுப்போர் - உன்னைப் பிரணவப் பொருள் என்று தியானித்து இருவினைகளும் கழியப் பெற்று முத்தி அடைவர்; ஓங்காரப் பொருளே பொருள் என்கலா உரவோர் - பிரணவப் பொருளே பரம்பொருளாகும் என்ற உண்மையை உணரமாட்டாத அறிவை உடையவர்கள்; ஓங்காரப் பொருள் ஆம் - இறைவனாகிய நீ பிரணவப் பொருளாக உள்ளாய் என்றும்; 'அன்று' என்று - இல்லை என்றும் தடுமாறி; ஊழி சென்றாலும் - உகாந்த காலம் கடந்தாலும் (பிறவியிலிருந்து வீடு பெறார்.)
பரம் பொருளே பிரணவமாகிய 'ஓம்' என்பது தியானிப்பார் சிறப்புக் கூறியது. தன் தன்மையும், பரம்பொருள் தன்மையும், புருஷார்த்தங்களின் தன்மையும், அடையும் உபாயத்தின் தன்மையும், அதற்கு விரோதிகளாக உள்ளவற்றின் தன்மையும் ஆகிய ஐந்தையும் பிரணவம் தன் சொல்லாலும் பொருளாலும் உணர்த்துவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who search out the meaning of Om are the ones who know you;
- knowing you as the meaning of Om, they shed both kinds of karma;
- but those who cannot say that the meaning of Om alone is the truth,
- wavering, It is the meaning of Om, It is not, even when the age is gone, are not freed.
What the poem says
Piramaṉ teaches that those who meditate on the meaning of the sacred syllable Om know Irāmaṉ's true nature and, recognising him as its meaning, are freed from good and bad karma alike. Those who waver, sometimes affirming and sometimes denying that he is what Om signifies, are not released even at the end of an age. Om is said to convey five things: the nature of the self, of the Supreme, of life's goals, of the means to reach them, and of the obstacles in the way.