கம்பராமாயணம் 10124 · யுத்த 37.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முந்து நீர் முளைத்த சினையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன் - நிலத்திற்கு முன்னதாகிய நீரிலிருந்து தோன்றிய முட்டை வடிவான இவ் வண்டத்தையும் அவற்றின் பகுதியாகிய பல்வேறு யோனி பேதங்களையும் படைத்தருளியவனாகிய பிரமன்; இனையது ஆகலின் - பரம்பொருளாகிய நீயே இராமனாக அவதரித்தலின்; எம்மை மூன்று உலகையும் ஈன்று இம்மனையின் மாட்சியை வளர்த்த எம்மோயினை வாளா முனையல்! - என்னையும் மூவுலகங்களையும் பெற்றெடுத்து இல்லற மேன்மையை உன்னோடிருந்து அழகுற நடத்துகின்ற சர்வ சக்தியாகிய எம் தாயை வீணே வெறுக்க வேண்டா; என்று அது முடித்தனன் - என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Since this is so, do not, for nothing, turn against our mother
- who gave birth to us and to the three worlds and made the glory
- of this household grow, so he concluded, he who made the egg
- that sprang from the primeval waters and all its parts.
What the poem says
Piramaṉ, maker of the cosmic egg that arose from the primal waters and of all its kinds of creatures, concludes. Since Irāmaṉ is the Supreme, he should not turn without cause against Cītai, the mother who bore Piramaṉ and the three worlds and who adorns Irāmaṉ's household.