கம்பராமாயணம் 1015 · பால 16.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொடி உலாம் கமலச் செங்கை - வளைகள் இயங்குகின்ற தாமரை போன்ற சிவந்த கைகளையும்; தூநகை துவர்த்த செவ்வாய் - தூய சிரிப்பையும் மிகச் சிவந்த வாயினையும்; கொடி உலாம் மருங்குல் - கொடிபோல் நெளியும் இடையினையும் உடைய, நல்லார் குழாத்து - மகளிர் கூட்டத்திடையே; நின்றான் ஒரு குரிசில் - நின்றவன் ஆகிய அரசன் ஒருவன்; கடி உலாம் கமல வேலி - மணங்கமழும் தாமரைக் கொடிகளை வேலியாக உடைய; கண்அகல் கானயாற்று - இடமகன்ற காட்டாற்றின் (நடுவே); பிடி எலாம் சூழ நின்ற - பெண்யானைகள் பலவும் (தன்னைச்) சூழ்ந்து நிற்க; மதம் பெய் யானை ஒத்தான் - மதம் பொழிகின்ற ஓர் ஆண் யானையைப் போன்றிருந்தான்.
நல்லார் குழாத்து நின்றான் ஒரு குரிசில், பிடியெலாம் சூழ நின்ற மதயானை ஒத்தான் என்று வினை முடிவு செய்க. அப் பெண்டிர் “நல்லார்” என்பதற்கு, “தொடி உலாம் கமலச் செங்கை, தூநகை, துவர்த்த செவ்வாய், கொடி உலாம் மருங்குல்” ஆகியவை காரணங்கள் என்கிறார். நீர்நிலை காட்டாற்றிற்கும், வளைத்து நிற்கும் மகளிர் பெண் யானைகட்கும், தனித்து நிற்கும் தலைவன் பெண்யானைகளால் சூழப்பட்ட ஆண்யானைக்கும் உவமையாயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a throng of fair women with red lotus hands where bangles slide, pure smiles and deep-red mouths,
- and waists that sway like creepers, a prince stood,
- and in the broad forest river fenced with fragrant lotuses
- he was like a must-streaming tusker with all his cow-elephants around him.
What the poem says
Another prince stands among women in the water. The poet first lists what makes them lovely: lotus-red hands with sliding bangles, pure smiles, red lips and waists as slender as creepers.
The pool becomes a broad forest river fenced with lotuses. The women crowding round him are cow-elephants, and he is the bull elephant in rut, standing out in the middle of his herd.