கம்பராமாயணம் 1014 · பால 16.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடைந்த நாள் கடலிடை அமிழ்தினோடும் வந்து தோன்றும் - திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது நடுவே அமிழ்தத்தோடும் எழுந்து தோன்றிய; மடந்தையர் சூழ நின்ற - (அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய) தேவ மங்கையர்கள் புடைசூழ விளங்கும்; மந்தரம் போல - மந்தர மலையைப் போல; ஆண்டு, ஆழித் தடம் புயம் பொலிய - அவ்விடத்திலே வாகுவலயங்கள் பொருந்திய அகன்ற தோள்கள் அழகுற விளங்க; தார்கெழு ஓர் வேந்தன் - மாலைகள் நிறைந்த ஒரு மன்னன்; நீர் குடைந்து ஆடும் மாதர்குழாம் - நீரில் மூழ்கித்திளைத்து ஆடும் மகளிரின் கூட்டம்; புடைசூழ நின்றான் - (தன்னைச்) சுற்றி நிற்க நின்றான்; மாது, ஓ - அசைகள். மந்தரம் போலும் ஓர்வேந்தன், மடந்தையர் சூழ நின்றான் என்க. படலத்தின் தொடக்கப் பாடலில் துருவாச முனிவர் சாபத்தால் கடலில் மூழ்கியவர்கட்கு, நீரில் மூழ்கியவரை உவமித்தார். இங்கு, மறவாமல், மூழ்கியவர் எழுந்தமையை வர்ணித்தார். அதே உவமை கொண்டு எழுந்தார் என்றார். நீர் நிலைக்குப்பாற் கடலும், நீர்நிலைக் கண் தோன்றும் தலைவனுக்கு மந்தர மலையும், அவனைச் சூழ்ந்து நின்ற மகளிர்க்கு திருப்பாற் கடலிலிருந்தும் எழுந்த தெய்வ மங்கையரும் உவமம் ஆயினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a throng of women plunging and bathing all around him, his broad
- shoulders bright with armlets, there stood a garlanded king,
- like Mount Mantaram standing amid the maidens who rose
- from the sea with the nectar, on the day it was churned.
What the poem says
Now the poet turns to the men. A king stands in the pool, broad-shouldered and garlanded, with bathing women all around him.
He is compared to Mount Mantaram, which the gods and demons used as a churning stick to churn the ocean of milk. From that ocean the nectar of immortality rose, and with it the heavenly dancers. Earlier the poet likened the crowd entering the water to Intiraṉ's treasures sinking into the sea. Now he finishes the comparison by showing them coming up out of it again, as the treasures did at the churning.