கம்பராமாயணம் 1023 · பால 16.21

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மிக்க வேந்தர்தம் மெய் அழி சாந்தொடும்,
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய,
செக்கர் வானகம் ஒத்தது, அத் தீம் புனல்.

பொருள் · Meaning in Tamil

மிக்க வேந்தர்தம் - மிகுதியாக வந்த வேந்தர்களுடைய; மெய் அணி சாந்தொடும் - உடம்பில் அழகு செய்த செஞ் சந்தனக் குழம்போடும்; புக்க மங்கையர் - அவ்வேந்தரோடு வந்த மங்கையருடைய; குங்குமம் போர்த்தலால் - குங்குமக் குழம்பும் (தன்னிடத்தே) நிரம்பியதனால்; அத் தீம் புனல் - அந்த இனிய நீர் வெள்ளம்; நீல முகில் தலை ஒக்க ஓடிய - கருநிற மேகங்களில் ஒரு சேரப் பரவிய; செக்கர் வானகம் ஒத்தது - செவ்வானத்தைப் போன்றது ஆயிற்று.

சார்ந்ததன் வண்ணம் ஆதல் உயிர்க்கு இயல்பு என்பர்; இங்கு நீர்க்கும் இயல்பு ஆயிற்று எனச் சுவையுறக் கூறினார். ஒக்க ஓடிய எனக் கூட்டுக. நீர், நீல வானிற்கும், மகளிர் மைந்தர் நீராடலால் கரைந்து கலந்த செஞ்சாந்தும் குங்குமமும் அந்திச் செவ்வான மேகத்திற்கும் உவமைகள் ஆயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the sandal paste that adorned the bodies of the many kings,
  2. and the saffron of the women who went in with them covering it,
  3. that sweet water became like the red evening sky
  4. spreading evenly over dark blue clouds.

What the poem says

The red sandal paste on the kings' bodies and the saffron paste on the women wash off and colour the pool. The dark blue water streaked with red looks like the sunset sky spreading over dark clouds.

People say that a living thing takes on the colour of the company it keeps. The poet notes with a smile that the same proves true of water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mikka vēntartam mey aṇi cāntoṭum,
pukka maṅkaiyar kuṅkumam pōrttalāl,
okka, nīla mukiltalai ōṭiya,
cekkar vāṉakam ottatu, at tīm puṉal.