கம்பராமாயணம் 1024 · பால 16.22

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆகம் உண்டது - உடம்பிற் பூசப் பெற்ற; காக துண்ட நறுங் கலவைக் களி - அகிலோடு சேர்ந்த நறுமணமுடைய சந்தனக் குழம்புகள்; அடங்கலும் நீங்கலால் - (நீரில் மூழ்கியாடலால்) முழுவதும் அழிந்துவிட்ட படியால்; பாகு அடர்ந்த பனிக்கனி வாய்ச்சியர் - பாகின் இனிமை மிக்க, குளிர்ந்த கொவ்வைக் கனி போன்ற வாயினையுடைய அம்மகளிர்; வேகடம் செய் மணி என மின்னினார் - சாணை பிடிக்கப் பெற்ற மாணிக்கக் கற்களைப் போல் விளங்கினர்.

காக துண்டம் - அகில். “ஏந்து எழிற் காக துண்டம்” (சூளா. சீய. 105) என்பர். மகளிர் அங்கங்களின் இயற்கை யழகினை மறைத்திருந்த செஞ்சாந்து முதலிய மணப் பொருள்கள் நீரில் குளித்தெழுகையில் அழிந்து போய் விட்டதனால் அப் பெண்டிர் சாணை பிடித்தெடுத்த இரத்தினங்கள் போல் விளங்கினர் என்று அழகுற வருணித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Since the fragrant paste mixed with akil
  2. that their bodies had drunk in was all washed away,
  3. the women with cool, fruit-red mouths rich with the sweetness of syrup
  4. gleamed like gems that have been cut and polished.

What the poem says

The sandal paste mixed with fragrant akil wood that covered the women's bodies has washed off in the water. Now their natural beauty shows through, and they shine like rubies fresh from the cutter's wheel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kākatuṇṭa naṟuṅ kalavaik kaḷi,
ākam uṇṭatu aṭaṅkalum, nīṅkalāl,
pāku aṭarnta, paṉik kaṉi vāycciyar,
vēkaṭam cey maṇi eṉa, miṉṉiṉār.