கம்பராமாயணம் 1027 · பால 16.25

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செய்ய தாமரைச் செல்வியை - சிவந்த தாமரையில் உறையும் திருமகளை; கையின் தீம்புனல் ஆட்டும் - (தன்) கையினால் இனிய நீரை (மொண்டு) நீர் ஆட்டும்; களிற்றரசு என்ன - ஆண் யானைகளின் அரசைப் போல, ஓர் தாரணி தோளினான் - மலர்மாலை யணிந்த தோளுடையான் ஒருவன்; நீர் முகந்து - தண்ணீரை மொண்டு; தையலாளை நெய் கொள் ஓதியில் - ஒருத்தியினுடைய நெய் பூசிய கூந்தலில்; எற்றினான் - வீசினான்.

உவமையணி: திருவை யானை நீராட்டுதல். “வரிநுதல் எழில் வேழம் பூ நீர் மேற் சொரி தரப் புரிநெகிழ் தாமரை மலர் அங்கண் வீறெய்தித் திருநயந்து இருந்தென்ன” (கலி. 47:5-7). எதிர் நின்று தன் இரு கைகளாலும் நீர் முகந்து தன் காதலியின் முடிமேல் நீர் சொரிவது திருமகள் இருமருங்கும் இரு யானைகள் தம் கைகளால் நீர் சொரிவது போன்றிருந்தது எனும் கற்பனையால், காதலனின் தோள் அகலும் அத் தோள்களுக்கிடையே கொடி போன்றுள்ள அவள் வடிவமென்மையும் தெய்வத்தன்மை தோற்றுவிக்கும் அவள் பேரழகும் சுட்டினார். இக் கோலமே கஜலட்சுமி சிற்பங்களாய் இன்று காணப்படும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A man with garlanded shoulders scooped up water
  2. and dashed it over a young woman's oiled tresses,
  3. like the king of tuskers bathing the goddess of the red lotus
  4. with sweet water from his trunk.

What the poem says

A man stands facing his beloved and pours water over her oiled hair with both hands. The poet sees in this the familiar image of the goddess Tirumakaḷ seated on a lotus while elephants on either side pour water over her with their trunks.

The comparison brings out how broad his shoulders are and how slight and godlike she looks between them. The same scene of the goddess bathed by elephants can still be seen carved in temples today.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taiyalāḷai or tār aṇi tōḷiṉāṉ,
ney koḷ ōtiyiṉ nīr mukantu eṟṟiṉāṉ,
ceyya tāmaraic celviyai, tīm puṉal
kaiyiṉ āṭṭum kaḷiṟṟu aracu eṉṉavē.