கம்பராமாயணம் 1028 · பால 16.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நளினம் ஏறிய - தாமரை மலர்கள் மேல் ஏறியிருந்த; நாகு இள அன்னம் - மிக்க இளமை வாய்ந்த அன்னப் பறவைகள்; சுளியும் மென் நடை - (நாம் பகைக்குமாறு) நம் மெல்லிய நடையினையும்; தோற்க நடந்தவர் - தோற்றுப் போம்படி நடக்கின்ற இம்மகளிரின்; ஒளி கொள் சிறுஅடி ஒப்பன ஆம் என - ஒளியுடைய சிறிய அடிகளை (இவை) ஒத்திருக்கின்றனவாம் என்று எண்ணியதனால்; விளிவு தோன்ற - (தம் மனத்திலுள்ள) கடுங்கோபம் வெளிப்படுமாறு; மிதிப்பன போன்றன - (அத் தாமரை மலர்களைத் தம் கோபம் இற) காலால் மிதிப்பவற்றைப் போன்றிருந்தன.
பகைவரை வெல்ல இயலாது போயின் அவரோடு தொடர்புடையாரையும் வெறுத்து ஒறுக்கும் மன இயல்பினையுணர்ந்த கவிஞர், தம்மை நடையழகால் வென்ற மகளிர்க்குத் தாம் இயற்றலாகும் தீமை ஒன்றும் இல்லாமையால், அன்னப் பறவைகள் அம்மகளிரின் அடியிணைகளை ஒத்த தாமரை மலர்களைத் தம் ஆத்திரம் தீர மிதிப்பன போலத் தாமரை மலர்கள் மேலிருந்து தம் கால்களால் மிதித்தன என்றார் - தற்குறிப்பேற்ற அணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because the women's walk had put their own soft, graceful gait to shame,
- thinking that these flowers were like the bright little feet of those women,
- they seemed to trample them to show their rage,
- the very young swans that had climbed up onto the lotuses.
What the poem says
Young swans stand on the lotus flowers in the pool. Their famous graceful walk has been outdone by the walk of the women of Ayōttī, and they cannot take revenge on the women themselves.
So, as people do when they cannot beat an enemy and turn on whatever belongs to him, the swans stamp on the lotuses, which look like the women's feet. The swans standing on the flowers is the real scene, and the motive is the poet's own fancy.