கம்பராமாயணம் 1029 · பால 16.27

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அழி சாந்து போய் - (நீர் விளையாட்டால்) பூசிய சந்தனம் அழிந்து போய்; அரிந்த கூர் உகிரால் - அரிந்த கூரிய நகக் குறிகளோடு; தெரிந்த கொங்கைகள் - தோன்றிய (மகளிரின்) தனங்கள்; செவ்விய நூல்புடை வரிந்த - அழகிய நூல்களைப் பக்கங்களில் சுற்றியுள்ள; பொன் கலசங்கள் மான - பொற்குடங்களை ஒத்திருக்க; எரிந்த சிந்தையர் - (அது கண்டு) மனம் கொதித்த ஆடவர்கள்; எத்தனை என்கெனோ? - எத்தனை பேர் (நான்) சொல்ல வல்லனோ? (வல்லேன் அல்லேன்)

உகிர்: நகம். நகக்குறியைக் குறித்தது - ஆகுபெயர். நூலைப் பக்கங்களில் சுற்றிய கலசங்கள் வேள்விக்குரியனவாதலால் மைந்தர்க்குக் காம வேள்வி நினைவுக்கு வந்தது. நகக் குறி கீறல்கள் பட்ட தனங்கள், வேள்விக்கு நூல் சுற்றிய பொற் குடங்கள் போல், நீராடலால் சந்தனம் கரைந்த போது காட்சிப்பட்டதால், காம வேள்வியின் கனல்பற்றி எரிந்த சிந்தையர் எத்தனைபேர் என எண்ண இயலவில்லை என வியந்தார். சந்தனங் கரைந்தது மகளிர் மார்பில். அதனால், எரிய வேண்டியதோ அம்மகளிர் மார்பு. எரிவதோ மைந்தர் மார்பு! என்ன விந்தை இது! என வியக்க வைக்கிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. How many men's hearts caught fire, how am I to tell,
  2. when, scored by sharp nails, with the sandal paste washed away,
  3. the women's breasts showed, like golden pots
  4. with fine thread wound about their sides?

What the poem says

The water has washed the sandal paste off the women's breasts and shows the marks of their lovers' nails. They look like golden pots with sacred thread wound round them, the vessels used at a sacrificial rite.

The sight reminds the men of the rite of love, and the poet cannot count how many of them burn with desire. The paste was washed from the women's breasts, yet it is the men's hearts that catch fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1erinta cintaiyar ettaṉai eṉkeṉō,
arinta kūr ukirāl aḻi cāntu pōy,
terinta koṅkaikaḷ, cevviya nūl puṭai
varinta poṟ kalacaṅkaḷai māṉavē.