கம்பராமாயணம் 103 · பால 3.22

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வாயில் - அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் (நான்கும்); எல்லை நின்ற வென்றியானை என்ன நின்று - நான்கு திசைகளிலும் நிற்கும் திக்கு யானைகள் என்னும்படி நின்றன (அன்றியும்); மால் முன்னம் ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் - திருமால் வாமனனாக வந்து விரைவாக திருவிக்கிரமனாகி விண்ணுலகத்தை அளந்த திருவடியைவிட; மீது உயர்ந்தவால் - மேலும் வாயில்கள் உயர்ந்து நின்றன; மல்லல் ஞாலம் யாவும் - வளம் நிறைந்த உலகத்தவரெல்லாம்; நீதி மாறுறா வழக்கினால் - நீதி தவறாது நடக்கச் செய்வதால்; நல்ல ஆறு சொல்லும் - நல்ல நெறிகளைக் கூறும்; வேதம் நான்கும் அன்ன - நான்மறைகளையும் ஒத்திருந்தன.

திக்கு யானைகள் தமக்குரிய எல்லையில் நிலைபெயராது நிற்பது போல நகரின் நான்கு திசைகளிலும் உள்ள கோபுர வாயில்கள் காணப்பட்டன. அவற்றின் உயரத்தைக் குறிப்பிட, விண்ணுலகை அளந்த திருமாலின் திருவடிகளை விடவும் உயர்ந்திருந்தன என்றார். செங்கோலின் சிறப்பால் நீதி தவறாது காத்தலின், நன்னெறி கூறும் நான்மறை போன்றது என்றார்.

மல்லல்: வளம். நல்ல ஆறு: நல்ல நெறி. ஆல்: அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the victorious elephants that stand at the bounds of the quarters, the gateways stood; and they rose
  2. higher than the foot with which Māl of old swiftly measured the world of the gods;
  3. and because they keep all the rich earth in ways that never swerve from justice,
  4. the gates were like the four Vedas that teach the good path.

What the poem says

The four towered gateways of Ayōttī are like the four elephants that, in Indian cosmology, hold up the four quarters of the world. They rise even higher than the foot of Viṣṇu, who as the dwarf Vāmana grew immense and strode across the heavens.

Because justice is kept through them, the four gates are also likened to the four Vedas, which show the right way to live.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ellai niṉṟa veṉṟi yāṉai eṉṉa niṉṟa muṉṉam māl
ollai umpar nāṭu aḷanta tāḷiṉ mītu uyarntavāl
mallal ñālam yāvum nīti māṟuṟā vaḻakkiṉāl
nalla āṟu collum vētam nāṉkum aṉṉa; vāyilē.