கம்பராமாயணம் 104 · பால 3.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆவி ஒத்த சேவல் கூவ - தனது உயிருக் கொப்பான ஆண் புறாவானது கூவி அழைக்கவும்; அன்பின் வந்து அணைந்திடாது - அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல்; ஓவியப் புறாவின் மாடு இருக்க - அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண் புறாவின் பக்கம் (ஆண் புறா உடன்) இருந்ததால்; ஊடுபேடை - ஊடல்கொண்ட பெண்புறா; தாஇல் பொன்தலத்தில் - குற்றமற்ற தேவ உலகிலே; நல்தவத்தினோர்கள் தங்கு - நல்ல தவம் செய்தவர்கள் தங்கியுள்ள; தாள் பூவுயிர்த்த - தாளை உடையதும் மலர்கள் பூத்திருப்பதுமான; கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால் - கற்பகச் சோலையிலே சென்று மறைந்திருக்கும்.
கோபுர வாயிலில் வாடும் ஆண்புறா, ஓவியப் புறாவை உண்மை என நினைத்து அதன் அருகிருக்கும் அதனைக் கண்டு ஊடிய பெண்புறா விண்ணுலகத்தின் கற்பகச் சோலையிலே புகுந்து மறைந்திருக்கும். இது மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத் தருவது. சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என்ற ஐவகை மரங்கள் நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்: குற்றமில்லாத. தாள்: அடி நாளமும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the flawless golden world, where those of good penance dwell, the jealous hen-dove
- flies into the Kaṟpakam grove, with its stems and blossoms, and hides there,
- for when her mate, dear to her as life, cooed to her, she would not come and embrace him,
- since he stayed beside a painted dove on the gateway; so she sulked.
What the poem says
A playful vignette from the gate towers. A male dove perches beside a dove painted on the gateway, taking it for real. His mate sees him there, flies off in jealous pique and hides in the wish-granting grove of heaven, ignoring his calls.
The figure turns on a mistake, praising both the lifelike paintings and the height of the towers that reach the sky. The Kaṟpakam grove is the heavenly garden of five wish-fulfilling trees.