கம்பராமாயணம் 105 · பால 3.24

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல் இடப் பசும்பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில் இடக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே.

பொருள் · Meaning in Tamil

கல் அடித்து அடுக்கி - மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச் சுவரெழுப்பி; வாய்ப்பளிங்கு அரிந்து கட்டி - முன்புறம் பளிங்குக் கற்களை அறுத்துக் கட்டி; மீது எல்லுடை பசும் பொன் வைத்து - அதன்மேலே ஒளிவீசும் பொன்தகடு வேய்ந்து; இலங்கு பன்மணிக் குலம் வில்லிடக் குயிற்றி - விளங்குகின்ற பலவகை மணிகளை ஒளிவீசும்படி (பொன்தகட்டில்) பதித்து; வாள் விரிக்கும் வெள்ளி மாமரம் புல்லிடக் கிடத்தி - ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன விட்டத்தை அதன் மீது பொருந்துமாறு வைத்து; வச்சிரத்த கால் பொருத்தி - வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

இது முதல் மூன்று பாடல்கள் குளகம். “குளகம் பல பாட்டு ஒருவினை 5 ன மௌலி சூட்டி அன்னவே என்ற மூன்றாம் பாட்டில் பொருள்முற்றுப் பெறும்.

கல்: மணிக்கல். அதனைச் செம்மையுறச் செதுக்கிச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு முன்புறம் பளிங்குக் கற்களை அளவுற அறுத்துக்கட்டி அதன் மேலே பொன்தகடு வேய்ந்து அந்தத் தகட்டிலே பலவகை மணிகளைப் பதித்து - வெள்ளிக் கை மரத்தைப் பொருத்தும்படி - வைத்து வைரத்தூண் நிறுத்தி என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cutting the gem-stones and stacking them, facing their front with sawn crystal,
  2. laying bright pure gold above, setting rows of shining gems
  3. to throw out rays, and laying across them beams of silver that spread their light
  4. so that they fit close, and planting pillars of diamond upon them —

What the poem says

This verse begins a group of three that form one long sentence. They describe the seven-storeyed mansions or gate towers of Ayōttī, and the main verb comes only at the end of the third verse.

Here the building rises in layers. Walls of cut gemstone are faced with crystal and plated with gold set with jewels, silver beams are laid across, and diamond pillars are set up on top.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kal aṭittu aṭukki, vāy paḷiṅku arintu kaṭṭi, mītu
el iṭap pacum poṉ vaittu, ilaṅku pal maṇik kulam
villiṭak kuyiṟṟi, vāḷ virikkum veḷḷi mā maram
pulliṭak kiṭatti, vacciratta kāl poruntiyē.