கம்பராமாயணம் 106 · பால 3.25

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மரகதம் அத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள்வகுத்த ஓளிமேல்
விரவு கைத் தலத்தில் உய்த்த மேதகத்தின் மீது அரோ!

பொருள் · Meaning in Tamil

மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து - மரகதத்தால் செய்த விளங்கு போதிகைக் கட்டைகளின்; வச்சிரம் புரைதபுத்து அடுக்கி - வைரக் கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்த; மீது பொன் குயிற்றி - மேலே பொன்தகட்டை வைத்து; மின்குலாம் நிரைமணிக் குலத்தின் வகுத்த - மின்னல் போல விளங்கும் வரிசையான இரத்தினத் தொகுதியால் ஆகிய; நீள் ஆளி ஒளி மேல் - நீண்ட சிங்க உருவின் வரிசை மீது; விரவு கைத்தலத்தின் உய்த்த - ஒழுங்கு பொருந்திய கைமரமாக வைக்கப்பட்ட; மேதகத்தின் மீது - கோமேதகத்தின்மேலே.

முன்பாட்டில் கூறிய வைரத்தூண்களின் மீது மரகதத்தாலான போதிகைகளை அமைத்து வச்சிரக் கற்களை வரிசையாக அடுக்கிப் பதித்து - அதன் மேலே பலவகை மணிகளைப் பதித்துச் செய்யப்பட்ட சிங்க வடிவங்களை அழகுக்காக வைத்து அதன் மேல் கோமேதகக் கைகளை அமைத்துத் தளப்படுத்தி என்பது கருத்து. ஒளி: வரிசை. ஆளி: சிங்கம். மேதகம்: கோமேதகம். மின்குலம்: மின்னற் கூட்டம். புரை தபுத்து: குறை நீக்கி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. upon brackets of gleaming emerald, laying diamonds in rows, purged of flaws,
  2. overlaying them with gold, and above the long rows of lions
  3. wrought from a gem-mass that glitters like lightning,
  4. upon the cross-beams set in order, of gomedha stone —

What the poem says

The long description of the towers continues. On the diamond pillars stand emerald brackets, set with rows of flawless diamonds and overlaid with gold.

Above them runs a line of lion figures made of glittering gems, and over these lie cross-beams of gomedha, a honey-coloured gemstone. The sentence is still building toward its conclusion in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marakatattu ilaṅku pōtikait talattu vacciram
purai taputtu aṭukki, mītu poṉ kuyiṟṟi, miṉ kulām
nirai maṇik kulattiṉ āḷi nīḷ vakutta oḷimēl
viravu kaittalattiṉ uytta mētakattiṉ mītuarō!