கம்பராமாயணம் 107 · பால 3.26

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏழ்பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன - ஏழு மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல (ஏழு கிளைகள்); நூல் ஊழ் உறக் குறித்து அமைத்த - சிற்ப நூல் விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள்; உம்பர் செம்பொன் வேய்ந்து - மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு; மீ சூழ் சுடர்ச் சிரத்து - மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே; நல் மணித் தசும்பு தோன்றலால் - சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால், வாழ் நிலக் குலக் கொழுந்தை - வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை; மௌலி சூட்டி அன்ன - முடி சூட்டியது போலத் திகழும்.

எழுநிலை அமைந்து, முற்றுப் பெற்ற கோபுரங்கள் கலசம் நிறுவப்பட்டு விளங்குவது, நில மகளுக்கு முடிசூட்டி அலங்கரித்தது போலத் திகழும் என்றவாறு; ஏழ் பொழில் - ஏழு மேலுலகத்தில் உள்ளவர்களைக் குறிக்கும்; நூல் - இங்கே சிற்ப நூலைக் குறித்தது; சிரத்து - சிகரத்திலே; தசும்பு - கலசம்.

அயோத்தி நகரத்து கோபுரங்களைப் பூமி தேவிக்குச் சூட்டிய மணிமுடியாகியச் சிறப்பிக்கும் நயம் மகிழ்தற்குரியது. மூன்றுபாடல்கள் எழுநிலைமாடச் சிறப்பைக் கூறுவனவாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if seven storeys had been built for the dwellers of the seven upper worlds, the towers, laid out by the rule of the builders' treatises,
  2. plated above with red gold,
  3. with fine jewelled finials showing on their bright peaks that reach the sky,
  4. seemed to set a crown upon the young maiden, the living Earth.

What the poem says

This verse completes the three-verse sentence. The finished seven-storeyed towers, roofed with gold and topped with jewelled finials that seem to touch the heavens, look as though a crown had been set on the head of the Earth goddess.

The seven storeys are fancied as homes made for the people of the seven upper worlds, and the towers are built strictly by the rules of the classical science of architecture.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēḻ poḻiṟkum ēḻ nilaittalam camaittateṉṉa nūl
ūḻ uṟakkuvittu amaitta umpar cempoṉ vēyntu, mīc
cūḻ cuṭarc cirattu nal maṇit tacumpu tōṉṟalāl
vāḻ nilakkulak koḻuntai mauli cūṭṭiyaṉṉavē.