கம்பராமாயணம் 108 · பால 3.27

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடைத் தவள மாளிகை,
வெம் கரும் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பால் கடல் தரங்கம் போலும் ஏ.

பொருள் · Meaning in Tamil

திங்களும் கரிது என - சந்திரனும் கருமை நிறத்து என்று கூறுமளவுக்கு; வெண்மை தீற்றிய - வெண்மை நிறம் பொருந்தப் பூசிய; சங்க வெண் சுதை உடை - சங்கிலிருந்து செய்த வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்தால் அமைந்த; தவள மாளிகை - வெள்ளை மாளிகைகள்; வெங்கடுங் கால் பொர - கடுமையான பெருங்காற்று வீசுவதால்; மேக்கு நோக்கிய - மேல் நோக்கி எழுந்து; பொங்கு இரும்பாற்கடல் - பொங்கும் பெரிய பாற்கடலின்; தரங்கம் போலுமே - அலைகளைப் போலக் காணப்படும்.

வானோங்கி உயர்ந்து விளங்கும் வெண்ணிற மாளிகைகள் கடும் காற்று வீசுவதால் மேலெழுந்து பாற்கடலின் அலைகளை ஒக்கும் என்றதால் நிறம், உயர்ச்சி இவை பற்றி வந்த தன்மைத் தற்குறிப்பேற்றவணியாகும். சுதை: சாந்து. தீற்றிய: பூசிய. தவளம்: வெண்மை. மேக்கு: மேலே. கால்பொர: காற்று மோத.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The white mansions, coated with such whiteness of shell-white lime
  2. that even the moon would seem dark beside them,
  3. rising upward as fierce, harsh winds beat on them,
  4. look like the waves of the vast, surging Ocean of Milk.

What the poem says

The poet moves on to the houses of Ayōttī. Their walls are coated with a plaster made from crushed conch shell and are so dazzling that the moon looks dark in comparison.

Rising tier on tier toward the sky, the white mansions look like the waves of the mythical Ocean of Milk, heaped up by a gale. The image captures both their colour and their height.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṅkaḷum karitu eṉa veṇmai tīṟṟiya
caṅka veṇ cutaiyuṭait tavaḷa māḷikai,
veṅ kaṭuṅ kāl pora mēkku nōkkiya
poṅku irum pāṟkaṭal taraṅkam pōlumē.