கம்பராமாயணம் 109 · பால 3.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன - நீக்குவதற்கரிய பொன் தகடுகள் மேலே வேயப்பட்டனவாகிய; புள்ளி அம்புறவு இறை - உடலில் புள்ளிகளை உடைய அழகிய மாடப் புறாக்கள்; பொருந்தும் மாளிகை - தங்கியிருக்கின்ற மாளிகைகள்; வெள்ளி அங்கிரிமிசை - அழகிய வெள்ளிமலையின் மீது; எள்ள அரும் கதிரவன் - இகழ்தற்கு அரிய சூரிய தேவனது; இளவெயிற்குழாம் விரிந்தது போலும் - இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.
வெண் சுதை பூசிய வெள்ளைநிற மாளிகைகளின் மீது, பொன் தகடு வேய்ந்து பொலிவது, வெள்ளிமலை மீது, கதிரவனின் இளங்கதிர்கள் விரிந்துகிடப்பது போன்று விளங்கியது என்கிறார். இதுவும் தற்குறிப்பேற்ற அணியாகும். புள்ளி: உடலின் மீதுள்ள அழகிய புள்ளிகள். புறவு இறை: புறாக்களுக்கு அரசன் (மாடப்புறா). தமனியம்: தங்கம். வெயிற்குழாம்: கதிர்களின் தொகுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mansions where the lovely spotted doves, kings among doves, nest,
- roofed with sheets of gold that none can strip away,
- look as if the throng of early rays of the Sun, whom none can scorn,
- had spread across a beautiful silver mountain.
What the poem says
The white plastered mansions are roofed with gold. White walls under golden roofs look like a silver mountain lit by the first rays of the morning sun.
The spotted doves that nest there are the 'mansion doves', a domestic pigeon, here called the kings of doves.