கம்பராமாயணம் 110 · பால 3.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வயிர நல்கால் மிசை - வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே; மரகதத் துலாம் - மரகதத்தாலாகிய உத்தரத்தை; செயிர் அறப் போதிகை கிடத்தி - குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது பொருத்தி, சித்திரம் உயிர் பெறக் குயிற்றிய - ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்தனவும்; உம்பர் நாட்டவர் அயிர் உற இமைப்பன - தேவ நாட்டவரும் (தமது விமானமோ என) ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்; அளவில் கோடியே - அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.
அயோத்தி மாநகரின் மாளிகைகள் அளவற்றன என்கிறார். துலாம் - உத்தரக் கட்டை
போதிகை - தூண்களின் தலையில் பாரம்தாங்கும்படி வைக்கப்படும் கட்டை. இரு பாலும் கீழ்நோக்கிய வாழைப்பூ வடிவம் அமைந்திருக்கும். அயிர் - ஐயம்; வயிரம் - காழ்த்தல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- On fine pillars of diamond, beams of emerald
- laid flawlessly upon the brackets; paintings
- wrought so they seem alive; mansions that the dwellers of the heavens
- gaze at in doubt as they gleam — there are countless crores of them.
What the poem says
Now the mansions of Ayōttī. They have diamond pillars, emerald beams resting on carved brackets, and paintings so lifelike they seem to breathe.
They shine so brightly that the gods, looking down, wonder whether they are their own flying celestial palaces. And there are tens of millions of them, beyond counting.