கம்பராமாயணம் 111 · பால 3.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சந்திர காந்தத்தின் தலத்த - சந்திர காந்தக் கற்கள் பரப்பிய தரையை உடையனவும்; சந்தன பந்தி செய்தூணின் மேல் - சந்தன மரங்களான வரிசையாக உள்ள தூண்களின் மீது; பவளப் போதிகை - பவளத்தால் செய்த போதிகையில்; செந்தனி மணித் துலாம் செறிந்த - சிவந்த மாணிக்கத்தாலான உத்தரம் பொருந்தியுள்ளனவும்; திண் சுவர் இந்திர நீலத்து - வன்மை மிக்க சுவர்கள் இந்திர நீலமணிகளால் அமைந்தனவுமான மாளிகைகள்; எண்ணில் கோடி - எண்ணமுடியாத கோடியாகும்.
சந்திர காந்தம்: சந்திரஒளி பட நீர் பொழியும் தன்மையுடைய கல். தலத்த, செறிந்த என்ற எச்சங்கள் தலத்தன, செறிந்தன என்று பொருள் உடைய பெயர்ச்சொற்கள். பந்தி: வரிசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With floors of moonstone, with coral brackets on rows
- of sandalwood pillars, with beams of single red ruby set close,
- and strong walls of sapphire —
- such mansions were countless crores.
What the poem says
Each part of these mansions is made of a different precious material. Their floors are moonstone, their pillars sandalwood, the brackets coral, the beams ruby and the walls blue sapphire.
Moonstone, as the commentary explains, was believed to ooze water when moonlight fell on it.