கம்பராமாயணம் 112 · பால 3.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாடகக் காலடி - வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம்; பதுமத்து ஒப்பன - தாமரை மலர் வடிவத்தில் அமைந்தனவும்; சேடரைத் தழீஇயின - கடைக்கால் ஆழத்தால் நாக உலகை தழுவியுள்ளனவும்; செய்ய ஆயின - வேலைப் பாட்டினால் செம்மை உடையனவும்; நாடு அகம் தொழிலின - யாவரும் விரும்பிக் காணும் தொழில் திறம் உடையனவும்; நடுவு துய்யன - நடுவிட மெல்லாம் தூய்மை உடையனவும்; ஆடகத் தோற்றத்து - பொன்னைப் போன்ற தோற்றமுடையனவும்; அளவு இலாதன - ஆகிய மாளிகைகள் அளவற்றனவாம்.
நாடு அகத் தொழிலின: கருதிச் செய்யப்படும் தொழில் திறம் உடையன என்றும் பொருந்தும். இப்பாடல் விலைமகளிரையும் குறிக்கும் வகையில் சிலேடையாக அமைந்துள்ளது. பாடகம் அணிந்த மகளிரின் பாதங்கள் தாமரை மலரை ஒப்பன; இளையரை (சேடரை) அணைத்திருப்பவர்; சிவந்த வாய் உடையவர் நடனத் தொழில் அறிந்தவர்; இடுப்பு (நடுவு); பஞ்சின் (தூய்) நுனியை ஒத்தது - என்று தக்கவாறு பொருள்கொள்ள வேண்டும்.
பாடகம் - கால் அணி; பாடு அகம் - வேலைப்பாடு மிகுந்த.
ஒப்பன, தழீஇயின, வாயின, தொழிலின, துய்யன, தோற்றத்த - முற்றெச்சங்கள். தழீஇ - தழுவி (சொல்லிசை அளபெடை).
ஆங்கிலம் · English translationAI
Translation
- Their pillar-feet, finely worked, are like lotuses;
- they embrace the serpent world below; they are beautiful in their workmanship;
- their craft draws every eye; their centres are pure;
- they look like gold — and they are without number.
What the poem says
The mansions are praised once more. Their pillars rise from lotus-shaped bases, their foundations go down to the serpent world, and their workmanship draws everyone's admiration.
The verse is a double-meaning pun that also describes the city's courtesans. Read that way, their ankleted feet are lotuses, they embrace young men, their mouths are red, they are skilled in dance, and their waists are as fine as the tip of a cotton fibre.