கம்பராமாயணம் 113 · பால 3.32

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புக்கவர் கண் இணை பொருந்து உறாது ஒளி
தொக்கு உடன் தயங்கி விண்ணவரில் தோன்றலால்,
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும்.

பொருள் · Meaning in Tamil

புக்கவர் - பார்க்கப் (புகுந்தவறி வந்தவர்; கண் இமை - கண் இமைகள்; பொருந்துறாது - வியப்பின் மிகுதியால், மலர்ந்து விளங்குமே அல்லாது ஒன்றுடன் ஒன்று சேரா (கண் கொட்டாமல் பார்த்தனர் என்பது கருத்து); ஒளி - மாளிகைகளில் பதித்த இரத்தினங்களின்; பூசிய வெண்சாந்தின் ஒளி; தொக்கு உடன் தயங்க - பார்ப்பவர் உடலின்மீது பாய்வதால் (எதிரொளி) அவர்கள் விளக்கம் பெற்று; விண்ணவரின் - தேவர்களைப் போல; தோன்றலால் - காட்சியளிப்பதாலும்; திக்குற - எல்லாத் திசைகளிலும்; செல்லும் - செல்ல வல்ல; தெய்வ வீடு - தெய்வீக விமானம்; ஒக்க - போல; நின்று - நிலத்தில் பதிந்து கிடக்கும்; உம்பர் நாட்டின் - அம்மாளிகைகளின் ஒளி வெள்ளம் தேவர் உலகத்தும்; இமைப்பன - சென்று ஒளி வீசுவன.

எப்போதும் ஒளி உமிழ்வதும் இயங்கும் இயல்பினவுமாய தேவ விமானங்கள் மண்ணகத்துத் தங்கிய போல் அம்மாளிகைகள் விளங்கின. அவற்றின் ஒளி காண்பார் உடல்களில் பதிவதாலும் கண் இமையாது இருத்தலாலும் அவர்களும் தேவராயினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who enter cannot close their pairs of eyes, and as the light
  2. gathers on them and glows, they appear like gods;
  3. so the mansions stand like the divine palaces that travel to every quarter,
  4. and they shine even into the world of the gods.

What the poem says

The mansions are so dazzling that visitors stare without blinking, and their jewelled light falls on them and makes them glow. Since the gods never blink and are radiant, the visitors themselves look like gods.

The mansions are like the flying palaces of the gods come to rest on earth, and their brilliance reaches up into heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukkavar kaṇ iṇai poruntuṟātu oḷi
tokkuṭaṉ tayaṅki viṇṇavariṉ tōṉṟalāl,
tikkuṟa nilaippiṉil cellum teyva vīṭu
okka niṉṟu imaippaṉa umpar nāṭṭiṉum.