கம்பராமாயணம் 114 · பால 3.33

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும்
தணிவன அறம்; நெறி தணிவு இலாதன;
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றன பாங்கும் இல்லை ஏ.

பொருள் · Meaning in Tamil

அணி இழை மகளிரும் - அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களும்; அலங்கல் வீரரும் - மாலையணிந்த மார்பினரான வீரர்களும்; துணிவன அறநெறி - அற நெறியினையே துணிவுடன் பற்றுவர்; மணியினும் பொன்னினும் வனைந்து - மணிகளாலும், பொன்னாலும் புனையப்பட்டுள்ள மாளிகைகள்; தணிவு இலாதன - என்றும் அறநெறிகளில் குறையாது நிறைந்திருப்பவை; பிறிது பணி இயன்றில - வேறு கல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை அல்ல; பகலை வென்றன - தம் ஒளியால் சூரியனையும் வென்று விளங்குபவை.

மாளிகைகள் என்ற எழுவாய், தொடர்ச்சி நோக்கி வரவழைத்து உரைக்கப்பட்டது. பொன்னாலும், மணியாலும் இயன்றன ஆதலால் அம்மாளிகைகள் சூரியனைவிட ஒளிபொருந்தியனவாக ஒளிர்கின்றன என்கிறார் மாளிகைகளில் வாழும் மகளிரும் ஆடவரும் அறநெறியிலேயே நிற்பவர்; ஆதலின் அவர் மாளிகைகளும் அறநெறியில் தணிவு இலாதன ஆயின. புறவொளியால் கதிரவனை வென்றவை மாளிகைகள்; ஆயினும் அகவொளியாகிய அறநெறியால் சிறந்தவை. ஆக, பெருமைக்கு உரியது என்பது கவிஞர் குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women adorned with fine jewels and the garlanded warriors
  2. hold firmly to the path of virtue; the mansions never slacken from it;
  3. they are built of gems and gold and of nothing else;
  4. they have outshone the day.

What the poem says

The people of these mansions, both the jewelled women and the garlanded heroes, keep firmly to the path of right conduct. The poet transfers this virtue to the houses themselves.

Built entirely of gold and gems, with no ordinary stone or clay, they outshine the sun by their outer brilliance. But their real distinction is the inner light of the righteous lives lived within them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇi iḻai makaḷirum alaṅkal vīrarum
taṇivaṉa aṟaneṟi taṇivu ilātaṉa;
maṇiyiṉum poṉṉiṉum vaṉainta allatu
paṇi piṟitu iyaṉṟila; pakalai veṉṟaṉa.