கம்பராமாயணம் 115 · பால 3.34

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வான் உற நிமிர்ந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழன; தயங்கு சோதிய;
ஊனம் இல் அறம் நெறி உற்ற; எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.

பொருள் · Meaning in Tamil

வான் உறு நிவந்தன - (அந்நகரத்து மாளிகைகள்) வானமளவும் உயர்ந்து இருப்பவை; வரம்பு இல்செல்வத்த - அளவற்ற செல்வத்தை உடையன; தான் உயர் புகழ்என - எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும்படி; தயங்குசோதிய - விளங்கும் ஒளி உடையன; ஊனம் இல் அற நெறிஉற்ற - குற்ற மற்ற அறநெறியைக் கடைப்பிடித்து வாழும்; கோன்நிகர் - அரசனைப் போன்று வாழும்; எண் இலாக் குடிகள்தம் கொள்கை சான்றன - எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச் சான்றாக உள்ளனவாம்.

அந்நகரத்து மக்கள் ஒழுக்கத்தில் சிறந்து - அற நெறியில் நின்று அரசர்களைப் போல வசதியுடன் வாழ்வதற்கு அவர்கள் வாழும் இம்மாளிகைகளே சான்றாக விளங்குகின்றன என்பதாம்.

“கோன் நிகர்க்குடிகள்” அரசரைப் போல வாழும் குடிமக்கள். சான்றன சான்றாக உள்ளன புகழ் எனத்தயங்கு சோதிய புகழ் பரந்திருப்பது போல ஒளி எங்கும் பரந்திருக்கும் மாளிகைகள் என்பது கருத்து. கொள்கை - தன்மை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They rise up to the sky; their wealth knows no bounds;
  2. their light gleams like soaring fame;
  3. they stand on the flawless path of virtue; they bear witness
  4. to the ways of their countless householders, who live like kings.

What the poem says

The mansions reach the sky, overflow with wealth and shine the way great fame spreads in every direction.

They stand as proof of the character of Ayōttī's citizens: numberless families who live virtuously and in comfort, each household like a king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉuṟa nivantaṉa; varampu il celvatta;
tāṉ uyar pukaḻ eṉat tayaṅku cōtiya;
ūṉam il aṟaneṟi uṟṟa; eṇ ilāk
kōṉ nikar kuṭikaḷtam koḷkai cāṉṟaṉa.