கம்பராமாயணம் 116 · பால 3.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருவியின் தாழ்ந்து - (அம்மாளிகைகள்) நீர் அருவி போலத் தாழ்ந்து; அலங்கு முத்து தாமத்த - அசையும் முத்து மாலைகளை உடையவை; விரி முகில் குலம்என - பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த; கொடி விராயின - கொடிகள் பரவியுள்ளவை; பருமணிக் குவையன - பெரிய மணிகளின் குவியல்களை உடையன; பசும்பொன் கோடிய - பசும்பொன் குவைகளை உடையன; பொரு மயிற்கணத்தன - வடிவொத்த மயில்களை உடையன.
‘பொரு மயில் கணத்தன’ என்பதற்கு உருவ அழகால் ஒத்த மயில் போன்ற மகளிர் கூட்டத்தை உடையவை என்பதும் பொருத்தமான பொருளாம்.
மலையும் போன்றுள்ள: மலையைப் போலவும் இருப்ப. அருவியும், முகிலும், மணியும், பொன்னும், மயிலும் மலையில் உள்ளபொருள்களாகும். அருவி போன்ற முத்து மாலைகளும் பன்மணித்திரள் பொன்குவியல் - ஆகியனவும் மாளிகைகளில் இருப்பதால் மலையை ஒத்திருந்தன என்கிறார். அலங்குதல்: அசைதல். தாமம்: மாலை. பருமணி: பருத்த மணிகள். கணம்: கூட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They have strings of pearls swaying, hanging down like waterfalls;
- banners spread over them like massing clouds;
- they have heaps of large gems; they have masses of pure gold;
- they have flocks of peacocks — they are like mountains too.
What the poem says
The mansions are compared to mountains. Pearl strings hang like waterfalls, banners spread like clouds, and they hold heaps of gems and gold, as mountains hold ores, along with flocks of peacocks.
All of these are things found on a mountain. The commentary notes that the peacocks can also be read as peacock-like women living in the houses.