கம்பராமாயணம் 117 · பால 3.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின - அகிலின் செழுமையான புகை மாளிகை எங்கும் கலந்தவைகளாய், முகிலொடு வேற்றுமை தெரிகலா - மேகத்துடன் வேற்றுமை அறிய முடியாத, முழுத்துகிலொடு - பெரிய கொடிகளுடன்; நெடுங்கொடிச் சூலம் மின்னுவ - நீண்ட கொடி மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள் ஒளிர்பவை; பகல் இடு மின் அணிப் பரப்புப்போன்ற - ஒளி வீசும் மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.
அகிற் புகையுடன் கலந்த கொடிகள் மேகத்தை ஒத்தும், அவை கட்டப்பட்ட கொடி மரத்தின் நுனியில் பொருந்திய சூலங்கள் மின்னுவது மின்னலை ஒத்தும் காணப்பட்டன. தற்குறிப்பேற்றவணி. மின் அணி: மின்னல் வரிசை. மாளிகைகளில் இடிதாங்கும் பொருட்டும் அழகுக்காகவும் சூலம் பொருத்துவர் ஒப்பு: திருச்சிற். 222
ஆங்கிலம் · English translationAI
Translation
- Blended and blurred with the rich smoke of burning aloe-wood,
- they cannot be told apart from clouds; with their whole cloths,
- the tridents on the tall flagpoles flash,
- like a spread of lightning strung across the daylight.
What the poem says
The flags on the mansions, wreathed in the smoke of incense, can't be told from clouds. The metal tridents fixed at the tops of the flagstaffs flash against them like lightning.
The commentary adds that such tridents were set on buildings both for ornament and to draw off lightning.