கம்பராமாயணம் 118 · பால 3.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
துடி இடைப் பணை முலை - உடுக்கை போன்ற இடையினையும் பருத்த தனங்களையும் உடைய; தோகை அன்னவர் - மயில் போன்ற சாயலை உடைய மகளிர்; அடியிணைச் சிலம்பு பூண்டு - தங்கள் இரு கால்களிலும் சிலம்பு அணிந்து; அரற்றும் மாளிகை - அவை ஒலிக்கும்படி நடக்கும் மாளிகைகளிலே; கொடியிடைத்தரளவெண் கோவை சூழ்வன - கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளவை; கடி உடை கற்பகம் கான்ற மாலையே - மணம்மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.
மாளிகையின் கொடிகளிலே தொங்கவிடப்பட்ட முத்துமாலைகள், கற்பக மரத்தில் உள்ள பூமாலைகளை ஒக்கும் என்றார். இது காட்சியணி. இனி “கொடியிடைத் தரள வெண் கோவை (அந்த மாளிகைகளின் உயர மிகுதியில்) கற்பக மரத்தின் மாலைகளைச் சூழ்வன” என்பது பொருந்தும். கடியுடைக் கற்பகம் என்பதற்குக் கற்பகச் சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mansions where women like peacocks, with waists like a small drum and full breasts,
- wear anklets on both feet that jingle as they walk —
- the strings of white pearls that hang among their banners
- are like the garlands put forth by the fragrant Kaṟpakam tree.
What the poem says
In the mansions, where the anklets of graceful women ring as they walk, strings of pearls hang among the banners. They look like the flower garlands that hang from the wish-granting trees of heaven.
The commentary offers a second reading. The houses are so tall that the pearl strands actually reach up and twine around the heavenly trees' garlands.