கம்பராமாயணம் 119 · பால 3.38

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காண்வரு நெடு வரை கதலிக் கானம் போல்
கோள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள்நிலா மழுங்கிட மடங்கி வைகலும்
சேண்மதி தேய்வது அக்கொடிகள் தேய்க்க ஏ.

பொருள் · Meaning in Tamil

நெடுவரை காண்வரு - பெரிய மலைகளில் காணப்படும்; கதலிக் கானம் போல் - வாழை மரங்களை உடைய தோப்பைப் போல; தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன - கொடிமரங்கள் நீண்ட கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன; சேண்மதி வாள்நனி மழுங்கிட மடங்கி - வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து; வைகலும் தேய்வது - நாள்தோறும் தேய்ந்து போவது; அக்கொடிகள் தேய்க்கவே - அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

நகரத்துக் கொடிகள் பெரிய மலைகளில் காணப்படும் வாழை தோப்பை போலக் காணப்படும்; வானத்தில் உள்ள சந்திரன் ஒளி குறைந்து வளைந்து நாள்தோறும் தேய்ந்து காணப்படுவது அக்கொடிகள் சந்திரனின் மீது உராய்வதனாலேயே என்றார் சந்திரன் தேய்பிறையில் தேய்வதற்குக் காரணம் கற்பித்துக் கூறியதால் இது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a grove of plantains seen on a high mountain,
  2. the throngs of banners on their tall staffs grew thick;
  3. that the far-off moon loses its bright edge, bends and wanes
  4. day after day is only because those banners rub against it.

What the poem says

The countless flags of Ayōttī on their tall poles look like a banana grove on a mountainside. Their tall, broad leaves suggest fluttering banners.

The poet then gives a playful false cause for the moon's waning. The flags reach so high that they scrape against it every day, wearing it down into a thin crescent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṇ varu neṭu varaik katalik kāṉampōl
tāḷ nimir patākaiyiṉ kuḻām taḻaittaṉa;
vāḷ naṉi maḻuṅkiṭa maṭaṅki vaikalum
cēṇ mati tēyvatu ak koṭikaḷ tēykkavē.