கம்பராமாயணம் 120 · பால 3.39

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன்திணி மண்டபம் அல்ல - பொன்னால் கட்டிய மண்டபம் அல்லாதவை; பூத் தொடர் - மலர்களால் அமைந்த மண்டபங்களாம்; மன்றுகள் அல்லன - பலர் கூடுமிடமாகக் கட்டிய பொது மன்றங்கள் அல்லாதவை; மாடம் மாளிகை - மேன்மாடியோடு அமைந்த மாளிகைகளாம்; குன்றுகள் அல்லன - செய் குன்றுகள் அல்லாதவை; மணி செய் குட்டிமம் - இரத்தினங்களைக் கொண்டு அமைத்த முற்றங்களாம்; முன்றில்கள் அல்லன - முற்றங்கள் அல்லாதவை; முத்தின் பந்தரே - முத்துப் பந்தல்களேயாகும்.

அந்நகரத்தில் பொன் மண்டபங்களும், மலர்மண்டபங்களும், பொதுமன்றங்களும், செய் குன்றுகளும், மணி மேடைகளும், முத்துப் பந்தல்களும் எங்கும் காணப்பட்டன; வெற்றிடங்களே இல்லை என்கிறார். இது முதல் நான்கு பாடல்களில் மாட மாளிகைகளின் ஒளியும் மீண்டும் கூறப்படுகிறது. குட்டிமம்: முன்றில்கள் (தளவரிசை செய்த தரை). மன்று: பொது மன்றங்கள். மாடம்: உப்பரிகை. குன்று: செய்குன்று (கட்டு மலை எனவும் கூறுவர்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those that are not halls built of solid gold are halls of flowers;
  2. those that are not public meeting-places are towered mansions;
  3. those that are not hills are courtyards paved with gems;
  4. those that are not courtyards are pavilions of pearl.

What the poem says

The verse uses a chain of 'not this, then that' to show that there is no empty space in Ayōttī. Every bit of ground holds either a golden hall or a flower pavilion, either a public meeting-place or a mansion, either an artificial hill or a jewelled courtyard, either a courtyard or a canopy strung with pearls.

The artificial hills mentioned are the man-made mounds of royal pleasure gardens.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tiṇi maṇṭapam alla pūttoṭar
maṉṟukaḷ allaṉa māṭa māḷikai
kuṉṟukaḷ allaṉa maṇi cey kuṭṭimam
muṉṟilkaḷ allaṉa muttiṉ pantarē.