கம்பராமாயணம் 121 · பால 3.40

Section பால காண்டம் / 3. நகரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துன்னிய தமனியத் தொழில் தழைத்த - உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய கட்டப்பட்ட; அக்கன்னி நல்நகர் - அந்த அழிவில்லாத மா நகரின்; மின்என விளக்கு என - மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும்; வெயில் பிழம்பு என - சூரியக் கதிர்களைப் போலவும் உள்ள; நிழல் கதுவலால் - ஒளி தன் மீது படுவதனால்; அப்புலவர் வானம் பொன் உலகு ஆயது - அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.

அமரர் உலகம் பொன்னுலகமாய் பொலிவதற்குக் காரணம் அயோத்தி மாநகர் பொன்னால் அமைந்து, தீப ஒளி, சூரியனின் கதிர்கள் ஆகியவை போல ஒளிர்வதால் அப்பேரொளியால் தேவ உலகு தப்ப வை என்றதால் ஏதுத் தற்குறிப்பேற்றவணி. அரோ, ஏ: அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like lightning, like lamps, like masses of sunlight,
  2. that virgin city, rich with close-wrought work of gold,
  3. casts its glow upward, and because of it
  4. the sky of the gods became a golden world.

What the poem says

Heaven is traditionally called 'the golden world'. Here the poet invents a reason for the name. Ayōttī, built of gold, shines like lightning, lamplight and sunshine, and its reflected radiance turns the heavens gold.

The city is called 'virgin' because it has never been conquered or destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ eṉa, viḷakku eṉa, veyiṟ piḻampu eṉa,
tuṉṉiya tamaṉiyat toḻil taḻaitta ak
kaṉṉi nal nakar niḻal katuvalāl arō
poṉṉulaku āyatu ap pulavar vāṉamē.