கம்பராமாயணம் 1033 · பால 16.31

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மேவினார் பிரிந்தார்க்கு, அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதி தன்னொடும் தாரகை,
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றது ஏ.

பொருள் · Meaning in Tamil

மேவினார் பிரிந்தார் - (அந்நீர் நிலையில்) விருப்பத்தோடு நீர் விளையாடிய ஆடவரும் மகளிரும் (அங்கிருந்து) பிரிந்து சென்றனர்; அந்த வீங்கு நீர் - (அதனால்) (நீர்) நிறைந்திருந்த அந்த நீர் நிலையானது; தாவுதண் மதி தன்னொடும் தாரகை - தவழ்ந்து செல்லும் குளிர் நிலாவும் விண்மீன்களும்; ஓவு வானமும் - விலகிச் சென்று விட்ட ஆகாயத்தையும்; உள்நிறை தாமரைப் பூ எலாம் - (தன்னுள்ளே) நிறைந்திருந்த தாமரை மலர்கள் யாவும்; குடிபோனதும் போன்றது - வேறிடத்திற்குக் குடி பெயர்ந்து போய்விட்ட பொய்கையையும் போல் ஆயிற்று.

தன்னிடம் நீராட வந்த அழகுபொலியும் கோசலநாட்டு ஆடவராலும் மகளிராலும் தனியழகு பெற்றிருந்த நீர்நிலை, அவர்கள் பெயர்ந்ததனால் விண்மீன்களை இழந்து போன வானத்தையும், தாமரை மலர்களை இழந்துவிட்ட தடாகத்தையும் போலப் பொலிவிழந்து போயிற்று என்று ஏங்குகிறார். “மீன் எலாம் சூழ நின்ற விரிகதிர்த் திங்களையும்” “வண்ணப் பூவெலாம் மலர்ந்த பொய்கைத் தாமரையையும்” (கம்ப. 943) உவமித்துள்ளார் ஆதலின், இங்கு, “தண்மதி தன்னொடும், உள்நிறை தாமரைப் பூ எலாம் குடிபோனதும் போன்றது” என்று பொருத்தமுற உவமித்தார். மகளிர் வெளியேற்றத்தைப் “பூவெலாம் குடிபோனது போன்றது” எனல் மகா கவிகட்கே வாய்க்கவல்ல சொல்லாட்சி எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who had come to it departed, and that brimming water
  2. was like a sky that the cool, gliding moon and the stars
  3. had left, and like a pool from which all the lotus flowers that filled it
  4. had moved away to live somewhere else.

What the poem says

Once the bathers leave, the pools lose all their splendour. The poet earlier compared the princes among the women to the moon among the stars, and a woman among her friends to a lotus among flowers. Now he completes those images. The pool looks like a sky the moon and stars have abandoned, or like a pond whose lotuses have all packed up and moved house.

The idea of flowers moving away to live elsewhere, used for the departing women, is a happy turn of phrase.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēviṉār pirintār, anta vīṅku nīr,
tāvu taṇ matitaṉṉoṭum tārakai,
ōvu vāṉamum, uḷ niṟai tāmaraippū
elām kuṭi pōṉatum, pōṉṟatē.