கம்பராமாயணம் 1034 · பால 16.32

Section பால காண்டம் / 16. நீர்விளையாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மானின் நோக்கியர் - மான் கண்களை ஒத்த விழிகள் கொண்ட மங்கையர்; மைந்தரொடு ஆடிய - ஆடவரோடு நிகழ்த்திய; ஆன நீர்விளையாடலை - (காணத்தக்க) நீர் விளையாடலை; நோக்கினான் வெய்யவன் - நோக்கினவனான கதிரவன்; தானும் அன்னது காதலித்தான் என - தானும் அந்த நீர் விளையாடல் நிகழ்த்த விரும்பியவனைப் போல; மீன் வேலையை எய்தினான் - மீன்கள் நிரம்பியுள்ள (மேலைக்) கடலையடைந்தான்.

சிறந்த விளையாடல்களைப் பார்த்தவர்கள், தாமும் அவ்வாடலை ஆட, உடனே மனக்கிளர்ச்சியுறுதல் இயல்பாதலின் அம்மனவியல் உணர்ந்த கவிஞர் கதிரவன் மறைவை இவ்வாறு அணியுறக் கூறினார் - தற்குறிப்பேற்ற அணி. அவர்கள் விளையாடியது நீர் விளையாட்டே ஆதலின் தானும் அந்நீர் விளையாட பெரு நீர் நிலையமாகிய கடலில் கதிரவன் இறங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sun, who had watched the water-play
  2. that the doe-eyed women played with their men,
  3. as though he too had come to long for the same,
  4. went down into the sea where the fish abound.

What the poem says

Evening falls. The sun has spent the day watching the men and women play in the water. When you watch a good game you want to join in, so, the poet says, the sun goes off to bathe too, and plunges into the western sea, the largest pool of all.

The sunset is real; the reason given for it is the poet's fancy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉiṉ nōkkiyar maintaroṭu āṭiya,
āṉa nīr viḷaiyāṭalai nōkkiṉāṉ,
tāṉum aṉṉatu kātalittāṉ eṉ,
mīṉa vēlaiyai veyyavaṉ eytiṉāṉ.