கம்பராமாயணம் 10346 · யுத்த 37.333
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாருதி காட்டினன் - அநுமன் காட்டினான்; கண்ணின் கண்ட அத் தோட்டலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால் - கண்ணாலே பரதனைப் பார்த்த அந்த இதழ் மலர்ந்த மாலை அணிந்த இராமனது தன்மையைத் தெரியச் சொல்லுவோமானால்; ஓட்டிய மானத்துள் - வானின்றிழிந்து வந்த விமானத்தில்; உயிரின் தந்தையார் கூட்டு உரு - உயிர் போலச் சிறந்த தன் தந்தையாகிய தசரத சக்கரவர்த்தியின் பொருந்திய வடிவத்தை; கண்டன்ன தன்மை கூடினான் - இலங்கையில் இராவணவதத்தின்பின் கண்டது போன்ற தன்மையை அடையப் பெற்றான்.
பரதனைத் தந்தையாக இராமன் காணவும், இராமனைத் தந்தையாகப் பரதன் காணவும் இக்காட்சி அமைந்து ஒருவர் ஒருவரிற் புகுந்தாற் போன்று அமைந்து நலம் செய்கிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- so Māruti showed him. If we tell the state of him of the garland of open petals
- who saw him with his own eyes,
- he felt as he had when he saw, in the speeding car,
- the bodily form of his father, dear as life.
What the poem says
When Aṉumaṉ points Paratan out, Irāmaṉ feels as he did after the war in Laṅkā, when his father Tacarataṉ appeared to him in a celestial car. The scene balances the earlier verse: Paratan sees Irāmaṉ as his father returned, and Irāmaṉ sees Paratan the same way.